பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை யசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பார்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்துச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து’’1
என்பது அப்பகுதி.
3. குடைக்கூத்து: இது, முருகன் அவுணரைவென்று ஆடிய ஆடல்.
‘‘படைவீழ்த் தவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடை’’
என்பது சிலப்பதிகாரம்.
‘‘அவுணர் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக் கலங்களைப்
போரிற்கு ஆற்றாது போகட்டு
வருத்தமுற்ற வளவிலே, முருகன் தன்
குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்றாடிய
குடைக்கூத்து’’
என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இந்தக் கூத்துக்கு நான்கு உறுப்புகள் உண்டு. முருகன் கோயில்களில் காவடி
என்னும் பெயருடன் இக்காலத்தில்
ஆடுகிற கூத்து குடைக்கூத்து போலும்.
4. குடக்கூத்து: கண்ணனுடைய பேரனாகிய அநிருத்தனை வாணன்
என்னும் அவுணன் சிறைவைத்த
போது, அவனைச் சிறை மீட்பதற்காகக்
கண்ணன் ஆடிய
1.
சிலம்பு, நடுநற் காதை, 67-77
2 கடலாடு காதை, 52-53
|