148 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
‘‘கரிய கடலின் நடுவு நின்ற
சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தை
யறிந்து
அவன் போரைக் கடந்து முருகன், அக்கடல் நடுவண் திரையே
யரங்கமாக
நின்று துடி கொட்டியாடிய துடிக்கூத்து’’ என்பது ‘‘கரிய கடலின்
நடுவு நின்ற
சூரனது வேற்றுருவாகிய
வஞ்சத்தை யறிந்து அவன் போரைக்
கடந்துமுருகன், அக்கடல் நடுவண் திரையே யரங்கமாக நின்று
துடி
கொட்டியாடிய துடிக்கூத்து’’ என்பது அடியார்க்கு நல்லார் உரை.
8. கடையம்: கடையக் கூத்து
என்பது, வாணனுடைய சோ என்னும்
நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய
மனைவியாகிய
அயிராணி, உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக் கூத்து என்று
சிலப்பதிகாரம் கூறுகிறது.
‘‘வயலுழை நின்று வடக்கு
வாயிலுள்
அயிராணி மடந்தை யாடிய
கடையம்’’
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.1
‘‘வாணனுடைய பெரிய நகரின்
வடக்கு வாயிற்கண் உளதாகிய
வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடிய கடையம் என்னும்
ஆடல்’’ என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இதற்கு உறுப்புகள் ஆறு.
9. பேடு: பேடியாடல்
என்பது, காமன் தன் மகனான அநிருத்தனைச்
சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரத்தில்
பேடியுருவங்
கொண்டு ஆடிய ஆடல்.
‘‘ஆண்மை திரிந்த பெண்மைக்
கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடல்’’
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.2
1. கடலாடு காதை, 62-63
2. கடலாடு காதை, 56-57
|