‘‘ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக்கோலத்தோடு காமனாடிய
பேடென்றும் ஆடல். இது தனது
மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன்
சோ நகரத் தாடியது’’
என்று
உரை கூறுகிறார் அடியார்க்கு
நல்லார்.
இது நான்கு உறுப்புகளையுடையது.
காவிரிப்பட்டினத்தில் 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திர விழா
நடந்தபோது,
அந்நகரத்
தெருவில் இப்பேடிக்கூத்து ஆடப்பட்டதென்றும்,
அதனை மக்கள் கண்டு
மகிழ்ந்தனர் என்றும் மணிமேகலை
கூறுகிறது.
அப்பகுதி இது:
‘‘சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்.’’1
10. மரக்கால்:
மரக்கால் ஆடல் என்பது, மாயோள் ஆகிய
கொற்றவைமுன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத
அவுணர்,
வஞ்சனையால் வெல்லக் கருதி பாம்பு, தேள் முதலியவற்றைப் புகவிட
அவற்றைக் கொற்றவை மரக்காலினால்
உழக்கி ஆடிய ஆடல். இதனை,
1. மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, 116-125.)
|