இந்தப் பதினொரு வகையான ஆடல்களையும் அந்தந்தப் பாத்திரத்தின்
ஆடை
அணிகளை அணிந்து, மாதவி
என்னும் கலைச்செல்வி மேடைமேல்
ஆடினாள், 1,800
ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலப்பதிகாரம்
கூறுகிறது.
கூத்து நூல்கள்
இப்பதினோர் ஆடல்களின் விவரங்களையும், அவற்றின்
உறுப்புகளையும்,
அவற்றிற்குரிய பாடல்களையும்,
அப்பாடல்களுக்குரிய
பக்கவாத்தியங்களையும், மற்றச்
செய்திகளையும் விளங்கக் கூறிய சில
நூல்களும்
பண்டைக் காலத்தில் இருந்தன என்று
யாப்பருங்கலம் என்னும்
நூலின் உரையாசிரியர் கூறுகிறார்.
அவர் எழுதுவது வருமாறு:1
‘‘வெண்டுறை. வெண்டுறைப் பாட்டாவன: பதினோராடற்கும் ஏற்ற
பாட்டு. அவை அல்லியம் முதலியவும், பாடல்களாக ஆடுவாரையும்,
பாடல்களையும்,
கருவியையும்
உந்து இசைப்பாட்டாய் வருவன.....
‘‘இனி இவற்றினுறுப்பு ஐம்பத்துமூன்றாவன: அல்லிய உறுப்பு
6;கொடுகொட்டியுறுப்பு
4; குடையுறுப்பு
4;குடத்தினுறுப்பு 5; பாண்டரங்க
உறுப்பு 6; பேட்டின் உறுப்பு
4; மரக்காலாடல் உறுப்பு 4; பாவையுறுப்பு
3 என இவை. இவற்றின் றன்மை
செயிற்றியமும், சயந்தமும்,
பொய்கையார் நூலும் முதலியவற்றுட்
காண்க.
ஈண்டுரைப்பிற் பெருகும்.
இவற்றில் செயிற்றியம் என்பது செயிற்றியனார் என்பராலும், சயந்தம்
என்பது
சயந்தனார்
என்பவராலும் செய்யப்பட்ட நூல்கள் போலும்.
பொய்கையார் செய்த கூத்த
நூலின் பெயர் தெரியவில்லை.
இந்தப்
பொய்கையாரைப் பொய்கையாழ்வார் என்று கருதி
மயங்கக்கூடாது.
1. யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை.
|