பக்கம் எண் :

New Page 1

காவியக் கலை

  

         நுண்கலைகளாகிய அழகுக் கலைகளில் தலைசிறந்தது காவியக கலை. ஏனென்றால், காவியக் கலை ஏனைய கலைகளைப் போலக்
கண்ணால் கண்டும் காதலால் கேட்டும் இன்புறத்தக்க தன்று; அறிவினால்
உணர்ந்து இன்புறத்தக்கது. காவியக் கலை உரைநடை யாகவும் இருக்கலாம்;
செய்யுளாகவும் இருக்கலாம். பொதுவாகச் செய்யுள் நடையிலேதான் இலக்கிய
அழகு மிகுதியும் அமைகிறது என்று கூறுவர்.

  

         காவியக் கலையின் இலக்கணம் என்னவென்றால், அதை எத்தனை
முறை படித்தாலும் தெவிட்டாமல் இன்பந் தருவதாக இருக்க வேண்டும். சில
இலக்கியங்களை ஒருமுறை படித்த பிறகு மறுமுறை படிப்பதற்கு விருப்பம்
இருப்பதில்லை. சில இலக்கியங்களை எத்தனை முறை திரும்பத்திரும்பப்

படித்தாலும் அவை இன்பமும் உணர்ச்சியும் அழகும் உள்ளனவாக இருக்கும்.
இவைதாம் சிறந்த இலக்கிய நுண்கலை எனப்படும்.

  

         இலக்கியத்தில் கூறப்படும் விஷயங்கள், உண்மை, அழகு, இனிமை
ஆகிய பண்புகளைக் கொண்டதாக இருந்தால், அவை படிப்போருக்கு
உணர்ச்சியையூட்டி மகிழ்ச்சியைத்தரும். அப்படிப்பட்ட இலக்கியங்கள், அவை
வசனமாக இருந்தாலும் செய்யுளாக இருந்தாலும், அழகுக் கலைகள் என்று

கூறத்தகும்.

  

         பொதுவாகச் செய்யுள் நடையிலே காவியங்கள் இயற்றப்படுவது
வழக்கம். காவியங்களிலே பல செய்யுள்கள் அழகுக் கலையுள்ளனவாக
அமைந்து விடுகின்றன. நமது தமிழிலே செய்யுள் நடையுள்ள காவியங்களே
உள்ளன.