172 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
அவைகளில் அழகுக் கலை நிரம்பிய செய்யுள்கள் பலவற்றைக் காணலாம்.
காவியப் புலவனும் ஓவியக்
கலைஞனும்
சிற்பக் கலைஞனும் ஓவியக் கலைஞனும், இயற்கை உருவங்களையும்
கற்பனையுருவங்களையும் தமது சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும்
அமைத்துக்காட்ட முடியுமாயினும், இலக்கியப் (காவியப்) புலவனைப்போல,
பல
கருத்துக்களை ஒருங்கே அமைத்துக்காட்ட அவர்களால் இயலாது. பல
கருத்துகளை ஒருமிக்க அமைத்துக்
கூறும் வல்லமை இலக்கியக்
கலைஞனுக்கேயுண்டு. இது இலக்கியக் கலையின் இயல்பு.
சொல்லோவியனாகிய இலக்கியக் கலைஞன், சிற்பக் கலையிலும் ஓவியக்
கலையிலும் காட்ட முடியாத நுட்பங்களையெல்லாம் தன்னுடைய
சொல்லோவியத்திலே அமைத்துக்
காட்ட வல்லவனாயிருக்கிறான். இலக்கியக்
கலைஞன் சொற்களைக் கையாள்வதில்
திறமையும் ஆற்றலும் உள்ளவனாய்,
கற்பனாசக்தியும் உள்ளவனாய் இருந்தால், அவன்
தனது
இலக்கியத்திலே உண்மையையும் அழகையும் இனிமையையும் அமைத்து,
படிப்போர் மனத்தை மகிழச் செய்கிறான். இதனால்தான் இலக்கியக் கலை,
அழகுக் கலைகளில்
சிறந்த நுண்கலைஎன்று கூறப்படுகிறது. இதனைச் சான்று
காட்டி விளக்குவோம்.
சிந்தாமணி
வயலிலே நெற்பயிர் செழிப்பாக வளர்கிறது. வளர்ந்து கருக்கொண்டு
விளங்குகிறது. பின்னர், கதிர் வெளிப்பட்டுத் தலைநிமிர்ந்து நிற்கிறது. மணி
முற்றிய பிறகு கதிர் சாய்ந்து தலைவணங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சியைக்
காவியப் புலவரும்
இலக்கியக் கலைஞரும் ஆன திருத்தக்கதேவர்
காண்கிறார். அக்காட்சியைத் தொடர்ந்து அவர்
உள்ளத்திலே சில
உண்மைகள் தோன்றுகின்றன. தமக்குத் தோன்றிய அந்த
|