உண்மைகளை அமைத்து நெல்வயலைப் பற்றி அழகும் இனிமையும் அமைய
ஒரு
சொல்லோவியம் தீட்டுகிறார். அச்செய்யுள் இது:
‘‘சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’’1
கருக்கொண்ட நெற்பயிர் சூல்கொண்ட பாம்பின் தோற்றம்போலக்
காணப்பட்டது; கதிர்கள் வெளிப்பட்டுத் தலைநிமிர்ந்து நிற்பது,
கீழ்மக்களுக்குச்
செல்வம் வந்தால் அவர்கள் இறுமாந்து இருப்பதுபோலக்
காணப்பட்டது; முற்றிய கதிர்கள் சாய்ந்து தலைவணங்கியிருப்பது, கற்றறிந்த
அறிஞர் அடக்கமாயிருப்பதுபோலக் காணப்பட்டது என்று நெற்பயிரில்
தாம்
கண்ட உண்மைப் பொருளை நயம்படக் கூறுகிறார்
.இக்கருத்துக்களையெல்லாம்
ஓவியப் புலவனும் சிற்பக் கலைஞனும் தமது
சித்திரத்திலும் சிற்பத்திலும் காட்டமுடியுமா?
சூளாமணி
இனி, சூளாமணிக் காவியம் இயற்றிய தோலா மொழித் தேவரின்
ஒரு
செய்யுளைக்
காட்டுவோம். மாலைநேரத்திலே, அகன்ற வானத்திலே,
வெண்ணிலா, பாலைப்
பொழிவதுபோல நிலவைப் பொழிந்து
கொண்டிருக்கிறது. நிலவைப் பருகுவதுபோல
ஆம்பல்
மலர்கள் மலர்ந்து
மகிழ்கின்றன. ஆனால், அதே குளத்தில் இருக்கும் தாமரைப் பூக்கள்,
தம்
இயல்புபடி மாலை நேரமானவுடன் இதழ்களைக் குவித்து மூடிக்கொள்கின்றன.
இது, நிலவைக்
கண்டு தாமரைகள் முகம் சுளிக்கும் காட்சிபோல்
தோலாமொழித
தேவருக்குத் தோன்றுகிறது.
அப்போது அவர் உள்ளத்திலே
1. சிந்தாமணி. நாமகள், 24
|