176 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இயலாது; இலக்கியக் கலைஞனால்தான் அமைத்துக் காட்ட முடியும்.
இராமாயணம்
கம்பனுடைய செய்யுள் ஒன்றைப் பார்ப்போம். கோதாவிரி ஆற்றை
இராமனும்
இலக்குமணனும் காண்கிறார்கள்.
அந்த ஆற்றில் பாயும் நீர்,
சிறந்த கவிஞருடைய
செய்யுள்போல, அகலமும் ஆழமும் அழகும் தெளிவும்
இன்பமும் உள்ளதாகக்
காணப்பட்டது என்று கூறுகிறார் கம்பர்.
‘‘புவியினுக் கணியாய் யான்ற
பொருள்தந்து புலத்திற் றாகி
அவியகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறி யளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்
றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
விரியினை வீரர் கண்டார்.’’
ஆற்று நீரையும் கவிஞனின் கவியையும் ஒப்பிட்டுச்
சொல்லோவியமாகத் தீட்டிய இக்கம்ப
சித்திரத்தை, ஓவியப் புலவரும் சிற்பக்
கலைஞரும் எவ்வாறு தமது கலைகளில் காட்ட முடியும்? காட்ட
முடியாது.
காவியக் கலையை மனத்தில் சிந்தித்து அறிவுக் கண் கொண்டு
காணவேண்டியிருப்பதனாலே,
காவியக் கலை அழகுக் கலைகளில்
நுட்பமானது என்று கூறப்படுகிறது.
காவியத்தின் சுவை
காவியப் புலவர் தாம் இயற்றும் காவியத்திலே மெய்ப்பாடு (சுவை)
அமையக்
காவியத்தை இயற்றுதல்
|