பக்கம் எண் :

காவியக் கலை

177


 

வேண்டும். நாடகத்தில் மட்டுந்தான் சுவை (மெய்ப்பாடு) அமையவேண்டும்
என்பதில்லை. காவிய நூல்களிலும் ஒன்பது வகையான சுவைகளும்
அமைந்தால்தான் காவியங்கள் இனிமையுறும். நாடகத்தில் சுவைகள்
இன்றியமையாதன போன்று காவியத்திலும் சுவைகள் அமையவேண்டும்
என்பது பண்டைக் காலத்தவர் கருத்து. இக்கருத்தினைத் தொல்காப்பிய
நூலும் அதன் உரையாசிரியர் இளம்பூரணஅடிகளும் நன்கு விளக்குகிறார்கள்

     ‘‘நகையே யழுகை யிளிவரன் மருட்கை

    யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்

    றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப’’

 

என்னும் தொல்காப்பிய (பொருள், மெய்ப்பாட்டியல்) சூத்திரத்துக்கு உரை
எழுதிய இளம்பூரண அடிகள், கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார்.

 

     ‘‘இவ்விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு
வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச்
செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டுமென்க.

 

     ‘உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்

    மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்’

 

என இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென
ஓதினமை உணர்க.’’

 

     இவ்வாறு கூறிய இளம்பூரண அடிகள்,

 

     ‘‘உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்

    மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்’’

 

என்னும் செய்யுளியல் சூத்திரத்திற்குக் கீழ்க்கண்டவாறு உரையும் விளக்கமும்
கூறுகிறார்: