பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றெனப் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்ட
திருக்குறள் சங்ககாலத்தில் இயற்றப்பட்டதாகும்.
இடைக்கால இலக்கியம்
இடைக்கால இலக்கியங்கள் என்று நாம் பிரித்துக் கூறியது,
கி.பி.300-க்கும் 15ஆம்
நூற்றாண்டுக்கும்
இடைப்பட்ட காலத்தையாகும்.
இக்காலத்தில் உண்டான இலக்கிய
நூல்கள் மிகப் பல. பதினெண் கீழ்க்கணக்குகளில்
சிலவும், தேவாரம், திருவாசகம்,
நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்திப் பாடல்களும், சிந்தாமணி,
சூளாமணி, குண்டலகேசி,
வளையாபதி, பாரத வெண்பா, கம்பராமாயணம், பெரியபுராணம்,
திருவிளையாடற்
புராணம் முதலிய இனிய காவியங்களும் ஆதியுலா முதலிய
உலாக்கள், திருவாரூர்
மும்மணிக் கோவை முதலிய
மும்மணிக் கோவைகள்,
பொன் வண்ணத்தந்தாதி முதிய
அந்தாதிகள், நந்திக் கலம்பகம்
முதலியகலம்பகங்கள், கலிங்கத்துப் பரணி முதலிய
பரணிகள்,
முத்தொள்ளாயிரம், நான்மணிமாலை முதலிய
பிரபந்த நூல்கள்
போன்றஇலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றின. இந்நூல்களின்
பட்டியலைக்
கூறுவதென்றால்
இடம் விரியும்.
பிற்கால இலக்கியம்
பிறகு
உண்டான இலக்கியங்களை,
இக்காலத்தில் காகிதம், பேனா
முதலிய எழுதுகருவிகள்
தோன்றி, ஓலைச்சுவடிகளும் எழுத்தாணிகளும்
மறையத் தொடங்கின. அச்சு யந்திரங்கள்
ஏற்பட்டு அச்சுப் புத்தகங்களும்
தோன்றலாயின. இக்காலத்தில்தான்
வசன
|