180 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இலக்கியங்கள் பெருகிவரத் தொடங்கின. மொழி பெயர்ப்பு நூல்களும்
அதிகமாகத் தோன்றின.சிந்து, பள்ளு, குறவஞ்சி, நொண்டி, காதல் முதலிய
பிற்காலத்துப் பிரபந்த நூல்களும்,ஸ்தல புராணங்களும், தேம்பாவணி,
இரக்ஷண்ய யாத்திரிகம், சீறாபுராணம் முதலிய கிறிஸ்துவ, இஸ்லாமிய
நூல்களும், பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம்
முதலிய
நாவல் என்னும் நவீன இலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றின.
முற்காலத்தில் தமிழ் ஐம்பெருங் காவியங்கள் இருந்தன. அவை
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி
என்பன. இவற்றில் குண்டலகேசியும் வளையாபதியும் இப்போது மறைந்து
விட்டன.
இப்போது தமிழில் சிறந்த காவியங்களாகக் கருதப்படுபவை
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி,
கம்பராமாயணம் நைடதம்,நளவெண்பா முதலியவை.
இவற்றுடன் பெரிய
புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் ஆகியவற்றையும்
கூறலாம். தமிழ்மொழி
காவிய வளம் நிறைந்த சிறந்த மொழி.
இதில் உள்ள காவியக் கலைகளையெல்லாம் இங்கு எழுதிக்காட்ட
முடியாது.காவியச் சுவையுள்ள அறிஞர் அவற்றைத் தாமே கண்டு உண்டு
சுவைப்பாராக.
காரிகை கற்றுக் கவி பாடலாம்; ஆனால், கவியிலே உண்மையும்
அழகும் இனிமையும் அமையப் பாடுவது அரிது. காவியங்களையும்
இயற்றலாம்; ஆனால் அதில் நகை, அழுகை,
இளிவரல், மருட்கை, அச்சம்,
பெருமிதம், வெகுளி,
|