24 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
தழுவி வருவது
நாடகத் தமிழ் எனப்பட்டது. நாடகத் தமிழில் நடனம்,
நாட்டியம், கூத்து என்பனவும்
அடங்கும். எனவே, அழகுக் கலைகள்
ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்து, கட்டடக் கலை, சிற்பக்
கலை,
ஓவியக் கலை, இசைக் கலை, கூத்துக் கலை (நடனம், நாட்டியம்) காவியக்
கலை, நாடகக் கலை
என ஏழாகக் கூறப்படும்.
அழகுக் கலைகளைக் கண்ணினால்
கண்டும், காதினால் கேட்டும்,
உள்ளத்தினால்உணர்ந்தும் மகிழ்கிறோம். இனி, இவற்றை
விளக்குவோம்.
கண்ணால் கண்டு இன்புறத்தக்கது
கட்டடக் கலை. பருப்பொருளாக
உள்ளபடியால்,கட்டடத்தைத் தூரத்தில் இருந்தும் கண்டு
களிக்கிறோம்
இரண்டாவதாகிய சிற்பக்
கலை மனிதன், விலங்கு, பறவை, தாவரம்
முதலான உலகத்திலுள்ள இயற்கைப் பொருள்களின் வடிவத்தையும்,
கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும்
அழகு பட அமைப்பது. இந்தச் சிற்பக்கலை, கட்டடக் கலையை விட
நுட்பமானது. இதனையும் கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.
மூன்றாவதாகிய ஓவியக்கலை,
சிற்பக் கலையைவிட நுட்பமானது.
உலகத்தில் காணப்படுகிற எல்லாப் பொருள்களின் உருவத்தையும்,
உலகில்
காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவத்தையும் பலவித
நிறங்களினாலே அழகுபட எழுதப்படுகிற படங்களே ஓவியக்
கலையாம்.முற்காலத்தில் சுவர்களிலும், துணிகளிலும் ஓவியங்கள்
எழுதப்பட்டன. படம் என்னும் சொல் படாம் (துணி) என்னும்
சொல்லிலிருந்து உண்டாயிற்று. இதனையும் அருகில்
இருந்து கண்ணால்
கண்டு மகிழ்கிறோம்.
நான்காவதாகிய இசைக் கலையைக்
கண்ணால் காண முடியாது. அது
காதினால் கேட்டு இன்புறத்தக்கது.
|