ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக
நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு
இன்புற முடியாது. காதினால் கேட்கக் கூடுமாயினும், கேட்பதனாலே மட்டும்
மகிழ முடியாது. காவியக் கலையைத் துய்ப்பதற்கு மனவுணர்வு மிக
முக்கியமானது. மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும்
ஆகையினாலே, காவியக் கலை கலைகளில் சிறந்த
நுண்கலை
என்றும்
மென்கலை என்றும் கூறப்படுகிறது.
இசைக் கலையோடு தொடர்புடைய நடனம், நாட்டியம், கூத்து
என்பனவும், காவியக் கலையுடன் தொடர்புடைய நாடகமும் கண்ணால்
கண்டும் காதால் கேட்டும மகிழத்தக்கன.
நாகரிகம் பெற்ற மக்கள் உலகத்திலே எங்கெங்கெல்லாம்
வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் அவர்கள் அழகுக் கலைகளை
வளர்த்திருக்கிறார்கள். அழகுக் கலைகள் மனித நாகரித்தின் பண்பாடாக
விளங்குகின்றன. நாகரிகம் பெற்ற எல்லா நாட்டிலும் அழகுக் கலைகள்
வளர்ச்சியடைந்திருந்தாலும், இந்த நுண்கலைகள் எல்லாம் எங்கும் ஒரே
விதமாக வளரவில்லை. அழகுக் கலைகளின் அடிப்படையான தன்மை
எல்லா நாட்டிலும் ஒரேவிதமாக இருந்தபோதிலும், அதாவது, கற்பனையையும்
அழகையும் இன்பத்தையும் தருவதே அழகுக் கலைகளின் நோக்கமாக
இருந்தபோதிலும், அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக
உருவடைந்து வளர்ந்திருக்கின்றன.
அந்தந்த நாட்டின் இயற்கையமைப்பு, தட்பவெப்ப நிலை, சுற்றுச்சார்பு
மக்களின் பழக்கவழக்கங்கள், மனோபாவம், சமயக் கொள்கை
முதலியவற்றிற்கு ஏற்றபடி அழகுக் கலைகள் வெவ்வேறு விதமாக
உருவடைந்திருக்கின்றன. இக் காரணங்களினால்தான் அழகுக்
|