26 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
கலைகள் எல்லாம் எல்லா நாட்டிலும் ஒரேவிதமாக இல்லாமல் வெவ்வேறு
நாட்டில்
வெவ்வேறு விதமாக
உள்ளன. இக்காரணங்களினால்தான் நமது
நாட்டு அழகுக்
கலைகளும்,
கிரேக்க நாட்டு அழகுக் கலைகளும்,
சீனநாட்டு
அழகுக் கலைகளும்,
ஜப்பான் நாட்டு
அழகுக் கலைகளும், உரோம நாட்டு
அழகுக் கலைகளும்,
இலங்கை
நாட்டு அழகுக்
கலைகளும், ஏனைய நாட்டு
அழகுக் கலைகளும் வெவ்வேறு விதமாக
வளர்ச்சியடைந்துள்ளன.
ஈண்டு, நமது தமிழ்நாட்டின் அழகுக் கலைகளைப் பற்றித்
தனித்தனியே
ஆராய்வோம். நமது
முன்னோர் அழகுக் கலைகளை எவ்வாறு
போற்றி வளர்த்தார்கள்
என்பதைக் காண்போம். இவற்றை ஆராய்வதற்கு
முன்னர், முத்தமிழ்ப் பேராசிரியர்
அருள்
திரு. விபுலானந்த அடிகளார்,
தமது யாழ் நூலிலே அழகுக்
கலைகளின்
பொதுவான சில
இலக்கணங்களைக்
கூறியுள்ளதை எடுத்துக்காட்டுவது சிறப்புடையதாக இருக்கும்.அவை
பின்வருமாறு:
இயற்றமிழ்
‘‘அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன்
மரபினவாகிய மூன்றும்
என்னும்
முப்பத்துமூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது
பொருள் பொதிந்த
சொற்களை
ஆக்கி, அவை கருவியாகப் பாரகாவியங்களையும்நீதிநூல்களையும் வகுத்து,
இம்மை மறுமைப்
பயனளிக்கின்றது.’’
இசைத்தமிழ்
‘‘சரிகமபதநி என்னும்
ஏழு ஓசை கருவியாக இசைத் தமிழானது
ஏழ்பெரும் பாலைகளை வகுத்து, அவை நிலைக்களமாக நூற்றுமூன்று
பண்களைப்
பிறப்பித்து, அவை தமது விரிவாகப் பதினோராயிரத்துத்
தொண்ணூற்றொன்று என்னுந் தொகையினவாகிய ஆதியிசைகளை யமைத்து,
|