|
இம்மையின்பமும் தேவர்ப் பரவுதலா னெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு
செய்கின்றது.’’
நாடகத் தமிழ்
‘‘நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி,
உவகை
என்னும்
மெய்ப்பாடுகளை நிலைக்களமாகக் கொண்டு,
உள்ளத்துணர்வினாலும்,உடலுறுப்பினாலும்,
மொழித்திறனாலும்,
நடையுடையினாலும் அவை தம்மைத்
தொழிற்படுத்தி, இருவகைக்
கூத்து,
பத்துவகை நாடகம் என்னுமிவற்றைத் தோற்றுவித்து,
நாடகத் தமிழ்
உள்ளத்திற்கு
உவகையளிக்கின்றது.’’
ஓவியம்
‘‘நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று
மூலவடிவங்களினின்று
தோன்றிய
உருக்கள் எண்ணிறந்தன. எல்லா
வகையான வர்ணங்களும் அமைந்த
அழகிய படங்களை
அச்சியற்றுவோர்
பயன்படுத்தும் நிறங்கள் மஞ்சள், சிவப்பு, நீலம் என்னும்
மூன்றுமேயாம்.’’
‘இவ்வாறு ஆராயுமிடத்து, கண்ணினாலும், செவியினாலும்,
உள்ளத்தினாலும்,
உணர்ந்து
இன்புறற் பாலவாய், அழகுக்கலை
யுருக்களெல்லாம் ஒருசில மூலவுருக்கள்
காரணமாகத்
தோன்றி
நின்றனவென்பது தெளிவாகின்றது.’
‘‘உருக்களை ஆக்கிக்கொள்ளும் முறையினைக் கூறும் நூல்கள்
பொதுவியல்புகளை
வகுத்துக் காட்டுவன. புலவன், இசையோன், கூத்தன்,
ஓவியன் என்ற இன்னோர், தமது
சொந்த ஆற்றலினாலே, நுண்ணிய
விகற்பங்களைத் தோற்றுவித்துச் செம்மை நலஞ் சான்ற
உருக்களைப் பெருக்குதலினாலே அழகுக் கலைகள் விருத்தியடைகின்றன.
|