பக்கம் எண் :

28

28

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

     ‘‘இவ்வாறு நோக்குமிடத்து, புத்தம் புதிய உருவங்களைப் படைத்துத்
தருதலே கவிஞர் முதலிய அழகுக் கலையோர் இயற்றுதற்குரிய
அருந்தொழில் என்பது புலனாகின்றது. மரபு பட்டு வந்த உருவங்களிற்
பயின்றோர் நுண்ணுணர்வுடையராயின், புதிய உருவங்களை எளிதின்
அமைப்பர். முன்னிருந்து இறந்துபட்ட உருவங்களை ஆராய்ந்து
கண்டறிதற்கும் அத்தகைய பயிற்சியும் நுண்ணுணர்வும்
வேண்டப்படுபவேயாம்.’’1

 

     இவ்வாறு அடிகளார், அழகுக் கலைகளின் பொது இலக்கணத்தை
விளக்கிக் கூறினார். நிற்க.
 

    இனி, தமிழ்நாட்டிலே நமது முன்னோரால் வளர்க்கப்பட்ட பழைய
அழகுக்கலைகளைப் பற்றித் தனித்தனியே ஆராய்வோம்.

 

 

 

 

 

 

 

 


1. யாழ்நூல், பக்கம் 361, 362.