பக்கம் எண் :

கட

 

 

கட்டடக் கலை

 

     அழகுக் கலைகளில் முதலாவதாகிய கட்டடக் கலையை ஆராய்வோம்.
வீடுகள்,மாளிகைகள், அரண்மனைகள் முதலியவை கட்டடங்களே. ஆனால்,
நாம் இங்கு ஆராயப்புகுவது கோயில் கட்டடங்களை மட்டுமே. முதலில்
கோயில் கட்டடங்கள் நமது நாட்டில் எந்தெந்தப் பொருள்களால்
அமைக்கப்பட்டன என்பதை ஆராய்வோம்.

 

     மிகப் பழைய காலத்திலே நமது நாட்டுக் கோயில் கட்டடங்கள்
மரத்தினால் அமைக்கப்பட்டன. அதன் பிறகு செங்கல், சுண்ணாம்பு, மரம்
முதலிய பொருள்களால் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குப் பின்னர்
பெரிய பாறைகளைக் குடைந்து  குகைக் கோயில்கள்1 அமைக்கப்பட்டன.
கடைசியாகத் தனித்தனிக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள்
அமைக்கப்பட்டன. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக
அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும். வெறும் மண்ணால் கட்டப்பட்ட
கோயில்களுக்கு (மண் தளி) என்பது பெயர்.

 

மரக்கட்டடங்கள்

 

     பழங்காலத்திலே கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன என்று
கூறினோம்.மரத்தைத் தகுந்தபடி செதுக்கிக் கட்டடம் அமைப்பது எளிது.
பண்டைத் தமிழகமான இப்போதைய மலையாள நாட்டின் சில இடங்களில்,
இன்றும் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
சிதம்பரத்தின் சபாநாதர் மண்டபம் இப்போதும் பெற்றிருக்கிறது.
சிதம்பரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி

 


1. Rockcut cave temples