விழுப்புரம் தாலுகாவில் உள்ள விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து,
வடமேற்கே
13மைல் தூரத்தில்
இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கில் 1/2 மைல்
தூரத்தில் சிறு
பாறைக்குன்றின் வடக்குப் பக்கத்தில்
இந்தக் குகைக் கோயில்
அமைந்திருக்கிறது.
இக்குகைக் கோயிலில் இருக்கிற வடமொழிச் சாசனம்
ஒன்று இவ்வாறு கூறுகிறது:
‘செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை
இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு
விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில்
அமைக்கப்பட்டது.’’
இந்த
சாசனத்தின் கருத்து என்னவென்றால், செங்கல், சுண்ணாம்பு,
மரம், உலோகம் முதலியவற்றைக் கொண்டு
கோயில் கட்டடங்களை
அமைக்கும் பழைமை முறையை மாற்றி, அப்பொருள்கள் இல்லாமலே
மும்மூர்த்திகளுக்குப்
பாறையில் கோயிலை அமைத்தான் விசித்திர சித்தன்1
என்னும் அரசன் என்பது.
மகேந்திரவர்மன் காலத்துக்கு முன்னே, நமது நாட்டுக் கோயிற்
கட்டடங்கள்
செங்கல்,
சுண்ணம்,
மரம், உலோகம் முதலிய பொருள்களைக்
கொண்டு
உண்டாக்கப்பட்டன
என்பதும், இவ்வரசன் காலத்தில்தான்
பாறைகளைச் செதுக்கி
உண்டாக்கப்படும்
குகைக்கோயில்கள் புதியவாகச்
சமைக்கப்பட்டன என்பதும்
இதனால்
தெரிகின்றன.
குகைக்கோயிலை அமைக்கும் புதிய முறையை ஏற்படுத்திக் கட்டடக்
கலையில்
ஒரு புரட்சியை உண்டாக்கிய
மகேந்திரவர்மன், வேறு பல குகைக்
கோயில்களையும்
அமைத்திருக்கின்றான். சென்னைக்கு அடுத்த
பல்லாவரத்திலும், காஞ்சிபுரத்துக்கு அடுத்த
பல்லாவரத்திலும்,
திருச்சிராப்பள்ளி மலையிலும்,
மண்டகப்பட்டு,
1. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயராகும்.
|