மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும், காஞ்சிபுரத்தில்
கயிலாசநாதர்
கோயில் என்று இப்போது பெயர் வழங்கப்படும்
இராஜசிம்மேச்சரம் என்னும் கற்றளியும்,
பனைமலை என்னும் ஊரிலுள்ள
கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட
கற்றளிகளாகும். இக் கற்றளிகள்
உண்டாக்கப்பட்டு ஏறக்குறைய 1,200 ஆண்டுகளாகியும்,அவை இப்போதும்
உள்ளன. இராஜசிம்ம பல்லவன் காலத்துக்குப் பிறகு கற்றளிகள் பல
தோன்றின.
செங்கற் கோயில்களைவிடக் கற்றளிகள் பல காலம் நிலை நிற்பவை.
கி.பி.8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல அரசர்கள் கட்டிய
கோயில்களில்
பெரும்பாலானவையும் கற்றளிகளே. கி. பி. 10ஆம்
நூற்றாண்டில் சோழர்கள் பல்லவ
அரசரை
வென்று சிறப்படைந்தார்கள்.
இச்சோழர்களுக்குப் பிற்காலச் சோழர் என்பது
பெயர். இச்சோழர்கள்
புதியவாகப் பல கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள்.
மேலும்,
பழைய
செங்கற் கட்டடக் கோயில்களை இடித்துவிட்டு அக்கோயில்களைக்
கற்றளியாகக்
கட்டினார்கள். இச்செய்திகளை நாம் சாசனங்களிலிருந்து
தெரிந்து
கொள்கிறோம்.
இதுவரையில் கோயிற் கட்டடங்களை எந்தெந்தப் பொருள்களால்
அமைத்தார்கள்
என்பதைக் கண்டோம். இனி, நமது நாட்டுக்கோயில்
அமைப்புகளையும் அவற்றின்
விதங்களையும் பற்றி ஆராய்வோம்.
மூன்று வகைப் பிரிவுகள்
பாரத (இந்திய) நாட்டுக் கட்டடங்களைச் சிற்பக் கலைஞர், மூன்று
பெரும்
பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை நாகரம், வேசரம்,
திராவிடம் என்பன.
இவற்றில் நாகரம் என்பது வட இந்தியக் கட்டடம். இது நருமதை
ஆற்றுக்கு
வடக்கே
வட இந்தியாவில்
|