|
54 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
எட்டுப் பட்டையையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த
காந்தம் என்று காமிகாகமம்
கூறுகிறது. ஆறு பட்டையை உடைய
சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று வேறு பாட
பேதத்தையும் காமிகாகமம் கூறுகிறது.1
நமது நாட்டில் ஆறுபட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக்
காணப்படவில்லை.
எட்டுப் பட்டையுள்ள
சிகரக் கோயில்கள் அதிகமாகக்
காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப்
பட்டையான சிகரமுள்ள கோயிலாக இருக்கக்கூடும்.

மணிக்கோயில் (ஸ்கந்த காந்தம்) விமானம்
திருநாவுக்கரசர் கூறிய கரக்கோயில், ஞாழற்கோயில்,
கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில்,
ஆலக்கோயில்
என்னும் கோயில் வகைகளையும்
சிற்பநூல்களில் வடமொழிப் பெயராகக்
கூறப்படுகிற
விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம்,
ஹஸ்திபிருஷ்டம் என்னும்
கோயில் வகைகளையும் ஒருவாறு பொருத்திக்
கூறினோம். இவற்றில் ஆலக்கோயிலும்
1. 60ஆவது ஏகபூமியாதி விதி படலம்
|