ஹஸ்திபிருஷ்டமும் ஒன்றே என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. ஆனால், ஏனைய
பொருத்தங்கள் என்னுடைய ஊகமேயொழிய முடிந்த முடிபு அன்று. இவற்றைப் பற்றிச்
சிற்ப சாஸ்திரிகள் ஆராய்ந்து முடிவு கூறவேண்டும்.
உயரமான கோயில்கள்
மிக உயரமான விமானத்தையுடையது தஞ்சாவூர் பெரிய கோயில்.
இராஜராஜசோழன்
இதைக்
கி.பி. 1000இல் கட்டினான். இது 190 அடி உயரம்
உள்ளது. இதைப்போன்று
அமைப்பும் உயரமும் உடையது,
கங்கை கொண்ட
சோழபுரத்தில் உள்ள கோயில். இது
கி.பி.1025இல் கட்டப்பட்டது. மற்றோர்
யரமான கோயில் திரிபுவனத்துக் கம்பேசுவரர்
கோயில். இவை சோழர்களால்
கட்டப்பட்டவை.
இவையே மிக உயரமான கோயில்கள்.பிற்காலத்துக்
கோயில்கள் இவ்வளவு உயரமாகக் கட்டப்படவில்லை.
காலப்பகுப்பு
திராவிடக் கட்டடக் கலையைப் பழைய காலம், பல்லவர் காலம்,
சோழர் காலம்,
பாண்டியர்
காலம், விஜயநகர அரசர் காலம் என்று ஐந்து
காலப்பகுதியாகப் பிரித்துக்
கூறுவர்.
பழைய காலம் என்பது கி.பி.600-க்கு முற்பட்ட காலம். அந்தக்
காலத்தில்,
கோயில் கட்டட
அமைப்புகள் முழுவதும் அமையப்பெற்று,
மரத்தினாலும்
செங்கற்களினாலும்
அமைக்கப்பட்டன.
பல்லவர் காலக் கட்டடம் என்பது கி.பி. 600 முதல் 900 வரையில
உள்ள காலம்.
இந்தக்
காலத்தில் கற்றளிகள் (செங்கற்களுக்குப் பதிலாகக்
கருங்கற்களை ஒன்றின் மேல்
ஒன்றாக அடுக்கிக்
கட்டடப்பட்ட கோயிற்
கட்டடங்கள்) ஏற்பட்டன.
|