பிறகு புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட காலத்தில், அவர்கள்
புத்தருடைய
உருவத்தை வைத்து வணங்கினார்கள்.
மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் நூல்கள் புத்தர் வணக்கத்தைக்
கூறும்போது
பாதபீடிகையையும்
தரும பீடிகையையும் கூறுகின்றன.
ஏனென்றால், அந்தக் காலத்திலே
புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்டுச்
சிற்பிகளால் சிற்ப உருவங்களாகச்
செய்யப்படவில்லை. இதனாலே
மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய
நூல்கள் மிகப்
பழமையானவை என்பது
தெரிகிறது.
புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்ட பிற்காலத்திலே அவ்வுருவத்தை
நின்ற கோலமாகவும், இருந்த
கோலமாகவும், கிடந்த(படுத்த) கோலமாகவும்
சிற்பிகள் அமைத்தார்கள். வைணவர், திருமால் திருவுருவத்தை
இவ்வாறே
மூன்று விதமாக அமைத்ததை மேலே கூறினோம்.
பௌத்த மதத்தைப்போலவே ஜைன சமயமும் (சமண மதம்) பண்டைக்
காலத்திலே
நமது நாட்டிலே
சிறப்படைந்திருந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த
தமிழர், அருகக்
கடவுளின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின்
உருவத்தையும்
வணங்கினார்கள்.
ஒரு செய்தி
பௌத்த, ஜைன மதத்துக்கும் சைவ, வைணவ சமயத்துக்கும் சிற்ப
உருவ
அமைப்பில்
உள்ள ஒரு நுட்பமான
செய்தியைக் கூற விரும்புகிறேன்.
அது
என்னவென்றால், பௌத்தரின்
புத்த உருவத்துக்கும் ஜைனரின்
தீர்த்தங்கரர் (அருகர்) உருவங்களுக்கும்
இரண்டு கைகள்
மட்டும் உண்டு.
ஆனால், அவர்களின் சிறு
தெய்வங்களுக்கு நான்கு
அல்லது எட்டுக் கைகள்
உள்ளன. இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ, வைணவ
உருவங்களில்
காணப்படுகின்றன.
சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு
நான்கு
அல்லது எட்டுக் கைகள்
|