பக்கம் எண் :

78
78

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

சிலவற்றை இங்குக் காட்டுவோம். அவற்றையெல்லாம் விரிவாகவும்
விளக்கமாகவும் கூறுவதற்கு இது இடம் அன்று; ஆயினும், சுருக்கமாகச் சில
கூறுவோம்.

 

தெய்வ உருவங்கள்

 

     தெய்வ உருவங்களில் சைவ சமயச் சிற்ப உருவங்களைக் கூறுவோம்.
சிவபெருமானுக்கு முக்கியமாக இருபத்தைந்து மூர்த்தங்களைக் கூறுவார்கள்.
அந்த மூர்த்தங்களைக் கல்லிலும் செம்பிலும் அழகாகச் சிற்பிகள்
செய்திருக்கிறார்கள். அவையாவன:

 

     1. இலிங்கோத்பவ மூர்த்தம், '2. சுகாசன மூர்த்தம், 3. உமாமகேசம்,
4. கலியாணசுந்தரம், 5. மாதொருபாகர் (அர்த்தநாரி) 6. சோமஸ்கந்தம்,
7. சக்கரப் பிரசாதன மூர்த்தம், 8. திரிமூர்த்தி, 9. அரியர மூர்த்தம்,
10. தக்ஷிணா மூர்த்தம், 11. பிக்ஷாடனர், 12.கங்காள மூர்த்தி,13. காலசம்மார
மூர்த்தி, 14. காமாந்தகர், 15. சலந்தர சம்மார மூர்த்தி, 16. திரிபுராந்தகர்,
17. சரப மூர்த்தி, 18. நீலகண்டர், 19. திரிபாத மூர்த்தி,20. ஏகபாத மூர்த்தி,
21. பைரவ மூர்த்தி,22. இடபாரூட மூர்த்தி, 23. சந்திரசேகர மூர்த்தி,
24. நடராஜ மூர்த்தி,

 

     இவற்றில் தக்ஷிணாமூர்த்தி உருவத்தில் வீணாதர தக்ஷிணாமூர்த்தி
என்றும், ஞான தக்ஷிணாமூர்த்தி என்றும், யோக தக்ஷிணாமூர்த்தி என்றும்
பிரிவுகள் உள்ளன.

 

    நடராஜ மூர்த்தத்தில் சந்தியா தாண்டவ மூர்த்தி, காளிகா தாண்டவ
மூர்த்தி, புஜங்கத்திராச மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ
மூர்த்திமுதலிய பிரிவுகள் உள்ளன.1


1. சிவபெருமானின் தாண்டவ மூர்த்தங்களைப் பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘‘இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்’’ என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.