பக்கம் எண் :

சிற்பக் கலை

79


 

பைரவ மூர்த்தத்தில் பிக்ஷாடன பைரவர், லோக பைரவர், காள பைரவர்,
உக்கிர பைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன.

 

கொற்றவை, அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்களும்
உள்ளன.

 

கணபதி உருவத்தில் பால கணபதி, நிருத்த கணபதி, மகா கணபதி, வல்லபை
கணபதி முதலிய பலவகையுண்டு.

 

சுப்பிரமணியர் உருவத்தில், தண்டபாணி, பழனியாண்டவர் வேல்முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள் உள்ளன.

 

பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்தி தேவர், நாயன்மார்கள்
முதலியவர்களின் உருவங்களும் உள்ளன.

 

வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன்,
கோவிந்தன், அநந்தசயனன், கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்ரமன்,
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன.
இலக்குமி, கஜலக்குமி, பூதேவி,ஸ்ரீதேவி முதலிய உருவங்களும்,
ஆழ்வார்கள்முதலிய உருவங்களும் உள்ளன.

 

பௌத்த, ஜைன சிற்பங்கள்

 

     பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர்
உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.

 

     ஜைன சமயத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்களும், யக்ஷன் யக்ஷி, சாத்தன் முதலிய பல உருவங்களும் உள்ளன.