80 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
இவ்வுருவங்களைப் பற்றிய விளக்கங்களையெல்லாம் விரிவாக இங்கு எழுதப்
புகுந்தால்
இடம் பெருகும்
என்று அஞ்சி நிறுத்துகிறோம். இவ்வுருவங்களைப்
பற்றித் தமிழில்
நூல்கள்
இல்லாதது குறைபாடு
ஆகும். ஆதரவு
கிடைக்குமானால் இந்நூலாசிரியரே இந்த
மூர்த்தங்களைப் பற்றிய நூல்
எழுத
இருக்கிறார்.
இயற்கை உருவங்களில் ஆண், பெண் உருவங்களின் அழகிய
சிற்பங்களைப் பற்றியும், இலைக்கொடி முதலிய
கற்பனைச் சிற்பங்களைப்
பற்றியும், விலங்கு, பறவை முதலிய சிற்ப உருவங்களைப் பற்றியும்
விரிவஞ்சிக் கூறாது விடுக்கின்றோம். சமயம் வாய்ப்பின் இவைகளைப் பற்றித்
தனி நூல் எழுதுவோம்.
பிரதிமை சிற்பங்கள்
பிரதிமை
உருவங்களைப் பற்றிச் சிறிது கூறிச் சிற்பக் கலைச்
செய்தியை முடிப்போம். பிரதிமை
உருவங்கள்1 என்பது, தனிப்பட்ட
ஆட்களின் உருவ அமைப்பை, உள்ளது உள்ளவாறு அமைப்பது. இந்தக்
கலை, மேல் நாட்டு முறைப்படி நமது
நாட்டில் வளரவில்லையாயினும், நமது
நாட்டு முறைப்படி ஓரளவு வளர்ந்திருந்தது.
பிரதிமை
உருவங்களில் பல்லவ அரசர் உருவங்கள் பழைமை
வாய்ந்தவை. மாமல்லபுரத்து (மகாபலிபுரம்) வராகப்பெருமாள்
குகைக்கோயிலில் இருக்கிற சிம்ம விஷ்ணுவும் அவன் மனைவியரும் ஆகிய
பிரதிமை உருவங்களும், அதே மனைவியரும் ஆகிய பிரதிமை
உருவங்களும், அதே இடத்தில்உள்ள மகேந்திரவர்மனும் அவன்
மனைவியரும்
ஆகிய பிரதிமையுருவங்களும், தருமராச இரதம் என்று பெயர்
வழங்கப்படுகிற அத்யந்த காம பல்லவேசுவரக்
கோயிலில் உள்ள
நரசிம்மவர்மன் பிரதிமையுருவமும், அர்ச்சுனன் இரதம் என்னும் பாறைக்
1. Portrait images
|