கோயிலில் உள்ள சில பல்லவ அரசர் அரசிகளின் பிரதிமை உருவங்களும்
பல்லவ
அரசர்களுடையவை.
சோழர் பிரதிமைகள்
பஞ்ச லோகத்தினாலே பிரதிமை உருவங்களைச் செய்யும் வழக்கம்,
பிற்காலச் சோழர்
காலத்தில்
ஏற்பட்டது. தஞ்சாவூர்ப் பெரிய கோயில்
சாசனம் ஒன்று,
கோயில்
அதிகாரியாயிருந்த
ஆதித்தன் சூரியன் என்னும்
தென்னவன் மூவேந்த வேளான்
என்பவன்
அக்கோயிலிலே இராஜராஜ
சோழன்,
அவன் அரசி உலகமாதேவி ஆகிய
இருவருடைய
செப்புப்
பிரதிமையுருவங்களைச் செய்துவைத்த செய்தியைக்
கூறுகிறது. அது
வருமாறு:
‘‘ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார்க்கு
ஸ்ரீகார்யஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன்
சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜீஸ்வரம்
உடையார் கோயிலில் பாண்டு இருபத்தொன்பதாவது வரை
எழுந்தருளுவித்த செப்பு பிரதிமங்கள்......’’
‘‘பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உசரத்து
இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த பெரிய
பெருமாள் பிரதிமம் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய்விரலே
இரண்டு தோரை உசரத்து பத்மம் ஒன்று. இதனொடுங்கூடச்
செய்த ஒன்பதிற்று விரற் சம சதுரத்து ஐய்விரலே ஆறுதோரை
உசரத்து பீடம் ஒன்று.’’
‘‘இருபத்து இருவிரலே இரண்டு தோரை உசரத்து இரண்டு
திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த இவர்
நம்பிராட்டியார் ஒலோகமாதேவியார் பிரதிமம் ஒன்று. இவர்
எழுந்தருளி நின்ற ஐய்விரல் உசரத்து பத்மம் ஒன்று.
இதனோடுகூடச் செய்த ஒன்பதிற்று விரற் சம சதுரத்து
ஐய்விரலே இரண்டு தோரை
உசரத்து பீடம் ஒன்று.’’1
1. No.98,pp.154-155.S.I.I. Vol.II
|