82 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
இச்சாசனத்தில் கூறப்படும் பெரிய பெருமாள் என்பது இராஜராஜ
சோழரைக்
குறிக்கிறது. ஒலோகமாதேவியார் என்பது இராஜராஜனுடைய
அரசியின் பெயர்.
திருக்காளத்திக் கோயிலில் இருந்த மூன்றாங் குலோத்துங்கன்
பிரதிமையுருவம்
செப்பினால் செய்யப்பட்டது. இது இவ்வரசன் இளைஞனாக
இருந்தபோது செய்த
பிரதிமையுருவம். இவ்வரசனுடைய மற்றொரு
பிரதிமையுருவம் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவர், கோயில் உட்கோபுரத்துக்கு
அருகில் இருக்கிறது. இது கற்சிலையால் செய்யப்பட்டது.
காஞ்சி
காமாட்சியம்மன் கோயிலில் இருந்த இவ்வரசனுடைய சுதையுருவம்
இப்போது
அழிந்துவிட்டது.
வேறு பிரதிமைகள்
விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயரின் செப்புப் பிரதிமையுருவம்
திருப்பதிக
கோயிலில் இருக்கிறது. இவருடைய கற்சிலைப் பிரதிமையுருவம்
சிதம்பரம் கோயிலில்
இருக்கிறது. தஞ்சாவூர், மதுரை இவ்விடங்களில்
அரசாண்ட நாயக்க மன்னர்களின
பிரதிமையுருவங்களும், கம்பநாடர்,
அப்பைய தீக்ஷிதர் முதலியவர்களின்
பிரதிமையுருவங்களும் தமிழ் நாட்டு
வெவ்வேறு கோயில்களில் காணப்படுகின்றன.
தென்னாட்டுப்
பிரதிமையுருவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால்,
அவையும் விரிவாகக் கூறவில்லை. தமிழ் நாட்டுப் பிரதிமையுருவங்களைப்
பற்றித்
தமிழிலே
விரிவாக ஒரு நூலேனும் இதுவரையில் எழுதப்படாதது
வருந்தத்தக்கது.
அலங்காரம் ஏன்?
கோயில்களிலே வணங்கப்படும்
சிற்ப உருவங்களைப் பற்றி ஒரு செய்தி
கூறவேண்டும். கல்சிற்ப உருவங்களும் செம்புச்
சிற்ப உருவங்களும் ஆன
தெய்வத் திருவுருவங்களுக்கு வேஷ்டி, சேலை முதலிய துணிகளை
|