உடுத்தி வருகிறார்கள்.
இது அநாவசியமானதும் தவறானதும் ஆகும்
வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச்
சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்திருக்கிறார்கள். சிற்பிகள்
அவ்வுருவங்களை நிர்வாணமாக
அம்மணமாக அமைக்கவில்லை. அப்படி
இருக்க, அச்சிற்ப உருவங்கள்மேல் துணிகளை உடுத்து விகாரப்படுத்துவது
அச்சிற்பங்களின் இயற்கையழகை
மறைத்துவிடுவதாகும். நடராசர்,
சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், சிவகாமசுந்தரி, பெருமாள்,
கணபதி, பூதேவி,
ஸ்ரீதேவி முதலிய சிற்பங்கள் உள்ளது உள்ளவாறே காணும்போது எவ்வளவு
அழகாகக் காணப்படுகின்றன!
அவற்றிற்குத் துணிகளை உடுத்திப் பார்க்கும்
போது, அவற்றின் அழகு கண்ணுக்குப் புலப்படாமல்
போய்விடுகின்றது.
இச்செயல், வேண்டுமென்றே
அவற்றின் அழகை மறைத்து,
அவற்றை விகாரப்படுத்துவதைப் போலக் காணப்படுகிறது.
|