சுவர் ஓவியம்
பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின்
மாளிகை, கோயில்
மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில்
ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள்.
சுவர் ஓவியங்கள்தாம் பண்டைக்
காலத்தில் பெரிதும் பயின்று வந்தன. ஒவ்வொரு
அரசனுடைய
அரண்மனையிலும் சித்திர மாடம் என்னும் கட்டடம் தனியே
அமைந்திருந்தது. பாண்டியன் நன்மாறன் என்பவன், தனது சித்திர
மாடத்திலே
தங்கியிருந்தபோது அங்கே உயிர் நீத்தான். அதனால் அவன்
பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில்
கூறப்படுகிறான்.
பாண்டியனின் சித்திர மாடத்தை மாங்குடி மருதனார் என்னும் புலவர்,
‘‘கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து’’
என்று கூறுகிறார்.1
‘‘குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டார் போன்ற விளங்குதலையுடைய கோயிலிடத்து
(அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி’’
என்று
இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.
நக்கீரர் பாடிய நெடுநல்வாடையிலும் பாண்டியனுடைய சித்திர மாடம்
கூறப்படுகிறது.
‘‘வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
1. மதுரைக் காஞ்சி, 484 - 85.
|