86 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’’
என்று அவர் சித்திர மாடத்தை வருணிக்கிறார்.
‘‘வெள்ளியை யொத்து விளங்குகின்ற சாந்தை வாரி, நீலமணியைக்
கண்டாற்போன்ற
கருமையினையும் திரட்சியினையும் உடைய திண்ணிய
தூண்களையுடையவாய்,
செம்பினாலே
பண்ணினாலொத்த தொழில்கள்
செய்தலுற்ற நெடிய சுவரிலே வடிவழகினை யுடைத்தாகிய
பல
பூக்களையுடைய வல்லி சாதியாகிய ஒப்பில்லாத கொடியை யெழுதிப் புதைத்த
கருவோடே பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல்’’ என்று இதற்கு
நச்சினார்க்கினியர்
உரை எழுதுகிறார்.
பரங்குன்றத்துச் சுவர் ஓவியம்
மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து மலையிலே
முருகப்பெருமான்
கோயிலைச் சார்ந்த ஒரு சித்திர மாடம் இருந்தது என்று
குன்றம்பூதனார் என்னும் புலவர்
கூறுகிறார்:
‘‘நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.’’
‘‘நின் குன்றத்தின்கண் எழுதிய அழகையுடைய அம்பலம், அம்பினது ஏத்தொழில்
நிலைபெற்ற காமவேள் சிரமச்சாலையை (ஆயுதப் பயிற்சி செய்யுமிடம்) யொக்கும்’’ என்பது
பரிமேலழகர் உரை.
இந்தச் சித்திர மாடத்தில் எழுதப்பட்டிருந்த சில ஓவியங்களை,
நப்பண்ணனார்
என்னும் புலவர் சற்று
|