பக்கம் எண் :

New Page 1

ஓவியக் கலை

87


 

விளக்கிக் கூறுகிறார். முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச்
சித்திர மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு
மகிழ்ந்தார்கள் என்றும்,எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி,
அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக்
கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள்
எழுதப்பட்டிருந்தன என்றும், இச்சித்திரங்களைக் கண்டவர் ‘இது என்ன, இது
என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன
சித்திரம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:

 

    ‘‘இரதி காமன்இவள்இவன் எனாஅ

    விரகியர் வினவ வினாவிறுப் போரும் 

    இந்திரன் பூசை இவளக லிகைஇவன்

    சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு

    ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்

    இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்’’2

 

திருச்சி மாவட்டம், திருச்சி தாலுக்காவில் உள்ள திருவெறும்பூர் கோயிலைச்

சார்ந்து சித்திரக்கூடம் என்னும் மண்டபம் பண்டைக் காலத்தில் இருந்த
செய்தியைச் சாசனங்கள தெரிவிக்கின்றன.1

 

பல்லவர், சோழர் ஓவியங்கள்

 

     காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயிலிலும், விழுப்புரம் தாலுக்காவில
பனைமலைக் கோயிலிலும், தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலிலும்
பல்லவர் காலத்துச் சித்திரமும், சோழர் காலத்துச் சித்திரமும் சுவர்களில்
காணப்படுகின்றன. புதுக்கோட்டையைச் சார்ந்த சித்தன்ன வாசல்
குகைக்கோயிலிலும், திருநெல்வேலித் திருமலை


1. பரிபாடல் 19 : 48-53

  2. S.I.I. Vol. XIII, No. 162, 138, 139.