பக்கம் எண் :

88
88

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

புரத்துக் குகைக்கோயிலிலும் பல்லவர் காலத்து ஓவியமும், பாண்டியர்
காலத்து ஓவியமும் காணப்படுகின்றன. குகைக்கோயில் சித்திரங்களும்
ஓவியங்களே. குகையின் பாறைச் சுவரின் மேல் மெல்லியதாகச் சுதை பூசி,
அதன்மீது ஓவியங்கள் எழுதப்பட்டன. பண்டைக்காலத்தில் முக்கியமான
கோயில்களில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. பிற்காலத்தில
அவை அழிந்தும் அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டன.

 

ஓவியம் அழிக்கப்படுதல்

 

     காஞ்சிபுரத்து நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்புறத்தளத்தில்
ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு
வியப்படைந்தேன். இரண்டாண்டு கழித்து அந்த ஓவியங்களைப்
படம்பிடிப்பதற்காகச் சென்றபோது, அந்தோ! அந்தச் சிற்பங்கள் முழுவதும்
மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கோபி நிற நீறு நன்றாகப் பூசப்பட்டுச்
சித்திரங்கள் யாவும் மறைக்கப்பட்டுக் கிடந்தன. இவ்வாறு  கலையறிவு
இல்லாத ‘‘தர்மகர்த்தர்கள்’’ எத்தனை கோயில்களில் எத்தனை சித்திரங்களை
அழித்தார்களோ! பண்டைக்காலத்தில் கலைப்பெருமை அறிந்த
கலையன்பர்கள் பொருள் செலவு செய்து சித்திரங்களை எழுதி அழகுபடுத்தி
வைத்தார்கள்; இக்காலத்து‘‘தர்மகர்த்தர்கள்’’ அந்தச் சித்திரங்களைச்
சுண்ணம் பூசி மறைத்துக் கோயிலை ‘‘அழகு’’ செய்கிறார்கள்!

 

‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுதவேண்டும்!’

 

     பண்டைக் காலத்தில் சுவர் ஓவியங்களே பெரிதும் எழுதப்பட்டன
என்றும் அவை பெரும்பாலும் அரசரின் அரண்மனைச் சுவர்களிலும்,
பிரபுக்களின் மாளிகைச் சுவர்களிலும், கோயில் சுவர்களிலும்

எழுதப்பட்டிருந்தன என்றும் கூறினோம். பட்டினத்துப்பிள்ளையார், தாம்
உலகக் காட்சியை மறந்து கடவுட் காட்சியை அடைந்ததை, சுவரில்