பக்கம் எண் :

New Page 1

ஓவியக் கலை

89


 

எழுதப்பட்ட ஓவியத்துக்கு உவமை கூறுகிறார். சுவரில் எழுதப்பட்ட
சித்திரங்களைக் காண்பவன், அந்த ஓவியங்கள் காட்டும் காட்சிகளைக் கண்டு
மனம் மகிழ்ந்து, அவற்றில ஈடுபடுகிறான். அவன் சற்று அருகில் வந்து அந்த
ஓவியங்களைக் கையினால் தடவிப் பார்க்கும்போது, அவை மறைந்து
சுவராகத் தோன்றுவதைக் காண்கிறான். இந்த உவமையை அவர் தமது
அநுபவத்துக்கு ஒத்திட்டுக் கூறுகிறார்:
  
         ‘‘யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி

         மேவரு நீயே மெய்யெனத் தோன்றினை

         ஓவியப் புலவன் சாயல்பெற எழுதி

         சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றி

         தவிராது தடவினர் தமக்குச்

         சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றனவே.’’1

  

சுவர்ச் சித்திரங்கள் பெரிதும் பயிலப்பட்டிருந்த படியினால்தான், ‘‘சுவரை
வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்’’ என்னும் பழமொழி
வழங்குவதாயிற்று. ‘‘அச்சிலேற் பண்டியுமில்லை, சுவரிலேற் சித்திரமுமில்லதே
போன்று’’ என்று அருங்கலச் செப்பு என்னும் நூல் கூறுகிறது.
  

கண்ணுள் வினைஞர்

  

         சித்திரக்காரர் கண்ணுள் வினைஞர் என்று கூறுப்படுகின்றனர்.
என்னை?

  

         ‘‘எண்வகைச் செய்தியும் உவமம் காட்டி

         நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்

         கண்ணுள் வினைஞர்.’’1

  

         ‘‘பலவகைப்பட்ட கூரிதாக வுணர்ந்த தொழில்களையும்
ஒப்புக்காட்டி, கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகளும்.’’

       


1.  திருக்கழுமல மும்மணிக்கோவை. 10.

2.  மதுரைக் காஞ்சி, 516 - 518