90 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
‘‘சித்திரமெழுதுவார்க்கு
வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு
அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார்
கண்ணிடத்தே தம்
தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் வினைஞர் என்றார்’’ என்பது
நச்சினார்க்கினியர்
உரை.
சித்திரகாரப் புலி
ஏறத்தாழக் கி.பி.600 முதல் 630 வரையில் அரசாண்டவனும்,
திருநாவுக்கரசர்
காலத்திலிருந்தவனுமான
மகேந்திர வர்மன் என்னும்
பல்லவ அரசன், தனது சிறப்புப்
பெயர்களில் ஒன்றாகச் சித்திரகாரப் புலி
என்னும் பெயரைக்
கொண்டிருந்தான்.
இதனால்,
இவன் சித்திரக்கலையில்
வல்லவன் என்று தெரிகிறான். இவன் ஓவிய
நூல் ஒன்றுக்கு ஓர்
உரை
எழுதினான் என்பதை, இவ்வரசன், காஞ்சிபுரத்துக்கு அடுத்த
மாமண்டூரில்
அமைத்த
குகைக்கோயில் சாசனம் கூறுகிறது.
ஓவிய நூல்
மாதவி என்னும் நாடக மகள், பல கலைகளைக் கற்றவள் என்றும்,
அவற்றில்
ஒவியக்கலையையும்
பயின்றாள் என்றும் மணிமேகலை கூறுகிறது:
‘‘ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத்துறை போகிய பொற்றொடி மங்கை’’1
அடியார்க்கு நல்லார் காலத்திலும் ஓவிய நூல் இருந்தது. அடியார்க்கு
நல்லார்
ஓவிய
நூலைக் குறிப்பிடுகிறதோடு, அந்நூலிலிருந்த ஒரு
சூத்திரத்தையும் மேற்கோள்
காட்டுகிறார்:
‘‘ஒவிய நூலுள், நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்றும்
இவற்றின்
விகற்பங்கள்
பலவுள; அவற்றுள் இருத்தல் - திரிதரவுடையனவும்
திரிதர
1. ஊர் அவர்.... 31 - 32.
|