பக்கம் எண் :

ஓவ

ஓவியக் கலை

91


 

 

வில்லனவுமென இரு பகுதிய: அவற்றுள் திரிதரவுடையன - யானை, தேர்,
புரவி, பூனை(?) முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை
பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், கவத்திகம்,
தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் எனவிவை. என்னை?

 

     ‘‘பதுமுக முற்கட் டிதமே யொப்படி

    யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந்

    தனிப்புட மண்டில மேக பாத

    முளப்பட வொன்பது மாகுந்

    தரிதர வில்லா விருக்கை யென்ப’

 

என்றாராகலான்.’’1

 

ஓவியம் பற்றிய பெயர்கள்

 

     ஓவியத்தை வட்டிகைச் செய்தி என்பர். என்னை? ‘‘வட்டிகைச்
செய்தியின் வரைந்த பாவையின்’’ என்பது மணிமேகலை.
 

     வண்ணம் தீட்டாமல் வரைந்த ஓவியத்துக்குப் புனையா ஓவியம் என்று
பெயர் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Outline drawing என்பர்.

 

     ‘‘மனையகம் புகுந்து மணிமே கலைதான்

    புனையா ஓவியம் போல நிற்றலும்’’2

 

என்றும்,


1.   சிலம்பு. வேனிற் காதை, 23 - 26ஆம் அடிகளின் உரை மேற்கோள்.

2.  மணிமேகலை, ஆதிரை., 130-131.