92 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
‘‘புனையா ஓவியம் புறம்போந் தென்ன’’1
என்றும் மணிமேகலை கூறுகிறது.
‘‘புனையா ஓவியம் கடுப்ப’’ என்று நெடுநல்வாடை (147) கூறுகிறது.
இதற்கு, ‘‘புனையா ஓவியம் கடுப்ப-வண்ணங்களைக் கொண்டெழுதாத
வடிவைக் கோட்டின சித்திரத்தை யொப்ப’’ என்று நச்சினார்க்கினியர் உரை
எழுதுகிறார்
ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி என்னும் பெயரும் உண்டு.
வட்டிகை என்பது துகிலிகை.2
காவிரிப்பூம்பட்டினத்திலே, தன் காதலியுடன் அமர்ந்து யாழ்
வாசித்துக
கொண்டிருந்த எட்டி குமரன் என்பவன், திடீரென்று ஏதோ சிந்தனையில்
ஆழ்ந்து ஓவியம்
போன்று அசைவற்றிருந்ததைக் கூறுகிற சீத்தலைச்
சாத்தனார், வட்டிகைச் செய்தி (ஓவியப் படம்) போல் இருந்தான் என்று
கூறுகிறார்:
‘தகரக் குழலாள் மன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தான்.....’’3
வட்டிகைப் பலகை என்பது, ஓவியம் எழுதும்போது வர்ணங்களைக்
குழைக்கும்
பலகை.
பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் அரசர் குலத்தில் பிறந்த
புலவர். இவர், ஓவியர் சித்திரம் எழுதும் துகிலிகை, பாதிப்பூவைப் போல
இருக்கும் என்று கூறுகிறார்.
1.
மணி., சிறைக்கோட்டம்., 88
2.
துகிலிகை - Brush
3.
மணிமேகலை, பளிக்கறை., 55-58.
|