பக்கம் எண் :

New Page 1

ஓவியக் கலை

93


 

    ‘‘ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய

    துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி’’

 

என்பது அவர் வாக்கு1

 

சில ஓவியச் செய்திகள்

 

     கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை
ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.

 

     ‘‘வல்லோன்

    எழுதி யன்ன காண்டகு வனப்பின்

    ஐயள் மாயோள்.................’’

 

என்று அவர் கூறுகிறார்.2

 

     ஓவியத்தைப் பற்றிச் சீவகசிந்தாமணிக் காவியத்தில் திருத்தக்கதேவர்
குறிப்பிடுகிறார். தோலாமொழித் தேவரும் தமது சூளாமணிக் காவியத்தில்
கூறுகிறார். கொங்குவேளிரும் பெருங்கதை என்னும் காவியத்திலே கூறுகிறார்.
 

    கம்பர், தமது இராமாயணத்தில் தமிழ் நாட்டுப் பண்புகளை அமைத்துக்
கூறுவதுபோலவே, இவர்களும் தமது காவியங்களில் தமிழ் நாட்டுக் கலைகள்
பலவற்றை இடையிடையே அமைத்துக் கூறுகின்றனர். ஓவியக் கலையைப்
பற்றி இவர்கள் கூறுவதைக் காண்போம்.

 

     கொங்குவேளிர் தமது பெருங்கதை என்னும் நூலிலே கூறும்
ஓவியத்தைப் பற்றிய செய்திகள் இவை:


1.  நற்றிணை, 118

2.  நற்றிணை, 146