வந்தவராதலின், அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட்டிருந்த சித்திரங்களைப்
பற்றியும், சித்திரக் கலையைப் பற்றியும் நன்கறிந்திருந்தார். ஆகவே, இவர்
தமது காவியத்தில் ஓவியங்களைப் பற்றிச் சில இடங்களில் கூறுகிறார்.
மங்கையரின் அழகான உருவ அமைப்பைக் கூறும் போது, ஓவியக்
கலைஞர் எழுதிய சித்திரம் போன்று அழகுடைய மங்கையர் என்று
கூறுகிறார்.
‘‘உரைகிழித் துணரும் ஒப்பின்
ஓவியப் பாவை ஒத்தார்’’2
என்றும்,
‘‘ஓவியர் தம் பாவையினொ
டொப்பரிய நங்கை’’3
என்றும்,
‘‘உயிர்பெற எழுதப் பட்ட
ஓவியப் பாவை யொப்பாள்’’1
என்றும் கூறுகிறார்.
அநங்கமாவீணை என்னும் இயக்கி, சீவகனை மயக்குவதற்காக அவனை
நாக்கினாள். அப்போது அவளுடைய அழகு, படத்தில் எழுதப்பட்ட பெண்
உருவம் போன்று அழகாகக்காணப்பட்டதாம்.
‘‘வடுப்பிள வனைய கண்ணாள்
வல்லவன் எழுதப் பட்ட
படத்திடைப் பாவை போன்றோர்
நோக்கின ளாகி நிற்ப’’2
என்று கூறுகிறார்.
1.
காந்தருவ தத்தையார்., 210
2.
சுரமஞ்சரியார்., 23
3.
சுரமஞ்சரியார்., 55.
4.
கனகமாலையார்., 17.
|