பக்கம் எண் :

166தமிழ்க்காதல்

    கட்சி காணாக் கடமான் நல்லேறு
    மடமான் நாகுபிணை பயிரின்      (புறம்.157)
    முட்புற முதுகனி பெற்ற கடுவன்
    துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்    (புறம்.158)
    புன்புறப் பெடையொடு பயிரி இன்புறவு
    இமைக்கண் ஏதாகின்றோ          (குறுந்.285)

களிறும், பிடியும் கலையும் மானும், காளையும் பசுவும், புறாவும் பெடையும்,
 பல்லியும் துணையும் இணைந்து கலக்கும் இனிமையைக் கண்டுகேட்ட
காதலர்கள் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார்கள் எனவும், காமப் பாய்ச்சலுக்கு
இடங் கொடுத்தார்கள் எனவும் இதுகாறும் தெளிந்தோம்.குயிலும் அன்றிலும்
குருவியும் வண்டும் கரடியும் குரங்கும் தத்தம் இனப்பிணையோடு
அளவளாவியிருக்கும் காட்சிக் கொள்ளைகள் தமிழ்த் தலைமக்களுக்குக் காதற்
கொள்ளைகளை, உரித்த வாழைப்பழத்து ஊசிபோல, எளிதில் விளைத்தன.
காதலுடைய இயற்கைக் காட்சிகள் எளிதிற் பற்றிக் கொள்ளுமாறு,
தமிழினத்தின் நெஞ்சம் காதற்பதம் உடையதாக அமைந்து கிடந்தது.
கலித்தொகையின் பதினோராம் பாடல் பலரறிந்த அகப்பாட்டாகும்.


     “தலைவன் பொருளீட்டச் செல்லும் சுடும்பாலை வழியில் நீரில்லை.
குட்டையில் உள்ள சிறுநீரும் யானைக்குட்டியால் கலங்கலாயிற்று,
அந்நிலையில் பெண் யானையை முன் குடிக்கச் செய்து எஞ்சியத்தைப்
பின்குடிக்கும் அன்புடையது ஆண்யானை. இக்காட்சியைக் கணவன்
காண்பான்.


     “இலைவறண்ட அக்காட்டில் காற்றில்லை. அன்புப்பேடை வியர்வையால்
துன்புறக் காண்கின்றது ஆண்புறவு. தன் சிறகையே விசிறியாகக்கொண்டு வீசிக்
காற்றைப் பிறப்பித்துப் பெண்புறாவிற்கு ஆறுதல் செய்கின்றது. இதனையும்
காண்பான் காதலன்.
“மலைகொதிக்கக் கதிரவன் புகழ்விளங்கும் அக்
கானகத்தில் நிழ லில்லை. அதனால் பிணைமான் நிலம்பாவாது
வருந்துகின்றது. அறிவுடைய கலைமான் ஓரிடத்து நின்று கொண்டு
வெப்பத்தைத் தான் ஏற்றுத் தன் மெய்நிழலை ஒதுங்கும் நிழலாகப்
பெண்மானுக்கு உதவுகின்றது. இதனையும் காணாதிரான் தலைமகன். வழியிடை
ஒன்றல்ல. இரண்டல்ல இவை போலும் அன்புச் செயல்களை அஃறிணைக்
குடும்பத்திடைக் காணும் தலைவன் நின்னை வாடவிடான்” என்று தோழி
தலைவியை ஆற்றிவிக்கின்றாள். யான் எடுத்துக் காட்டிய தமிழின
மனப்பான்மையை இக் கலிப்பாவால் மேலும் தெளியலாம். கார் கூதிர்
இளவேனிற் பருவங்களும் மாலை யாமப் பொழுதுகளும் தென்றல் வாடைக்
காற்றுக்களும் இளநிலவும் வெண்ணிலவும் பசுவின் மணியொலியும்
அன்றிலின்