பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்167

அகவலும் குயிலின் கூவலும் புறாவின் பயிரும் வண்டின் முரலும் பல்லியின்
சொல்லும் குழலின் இசையும் முல்லையின் மணமும் எல்லாம் காதற்
கிளர்ச்சியையே இளம் பாலார்க்கு எழுப்பின; இளநெஞ்சங்களும்
அக்கிளர்ச்சிக்குத்தான் பண்பட்டுக் கிடந்தன.     

    அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
    எவ்வ நெஞ்சந் தெஃகெறிந் தாங்குப்
    பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
    தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே.
    அதனினும் கொடியாள் தானே; மதனின்
    துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
    பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென,
    வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
    தண்டலை யுழவர் தனிமட மகளே     (நற். 97)

     தனித்துறையில் ஓர் இல்லக்கிழத்தி கார்காலத்து நிகழ்ச்சிகளால்
தாக்குண்ட காதற்பாடுகளைத் தொகுத்துக் கூறும் அரும்பாடல் இது.
இணைபிரியாக் குயில் கூவுவதைக் கேட்கின்றாள். ‘கார்ப்பருவத்து நாங்கள்
கூடிக்கலந்து குலவி வாழ்கின்றோம். நீயோ தெரிந்து இரங்குகின்றாய்’ என
நகையாடி இடித்துரைப்பது போல், அக் கூவல் அவன் உள்ளத்தைத்
தைக்கின்றது; அவனை
என்று கூடப்பெறுவேன் என்னும் பால்வேட்கையைத்
தூண்டுகின்றது. கார்ப்பருவத்தில் ஆற்று நீரோட்டத்தைக் காண்கின்றாள்.
இத்தலைவெள்ளத்தில் புனலாடிக் களிக்கும்வண்ணம் அவன் உடனுறைகிலனே;
இவ்வெள்ளம் யான்காண ஏன் ஓடுகின்றது என்று வெறுக்கின்றாள்.
பசுங்குருக்கத்தி மலரும் சிறுசண்பக மலரும் விலைக்கு வேண்டுமா?
கொள்வாருண்டா என ஒரு சிறுமி கூறிக்கொண்டு மாலைப்போதில் தன்
தெருவழியே செல்லுகின்றாள். அவள் சொல் செவிக்கு ஏறுகின்றது, மலரின்
மணம் மூக்கிற்கு ஏறுகின்றது. மலரைச் சூட்டி மணத்தை நுகர்வார் பக்கத்தில்
இல்லையே; இல்லாத போது, இம்மடல்கள் என் செவிகேட்க ஏன் மலர்
விற்பனை பகர்கின்றாள் என்று நோகின்றாள் தனித்த தலைவி. குயிலின் இசை
தலைவியின் செவிக்கு இனிக்கவில்லை; ஆற்றொழுக்கு அவள் கண்ணுக்கு
இனிக்கவில்லை. மலரின் மணம் அவள் மூக்கிற்கு இனிக்கவில்லை.
இனிக்கவேண்டும் இவை ஒருவனுடன் இல்லாமையால் இனிக்கவில்லை.
இயற்கைப் பொலிவுகள் அவட்கு இன்பப் பொலிவை அளிக்காவிட்டாலும்,
இன்பக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டன, புணரும் ஏக்கத்தைப்
பன்மடங்காக்கின. ஓர் இளந்தமிழ் மகள் தன் காதலெண்ணத்திற்கு ஏற்பவே
இயற்கைச் சூழ்நிலைகளைப் பார்க்கின்றாள். கருத்து வாங்கிக்கொள்கின்றாள்.
சூழ்நிலைகளின் தன்மைக்கு வயப்படாமல்,