பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்179

எந்த வயதுடைய மகளும் என்று பொருளாகாதன்றோ?. “காமம் சாலா
இளமையோள்” என்ற அடைத்தொடரால், காமம் சாலுதற்கு, காமச்செவ்வி
பக்குவப்படுதற்கு, உரிய பருவ அணிமையில் இருப்பவள் என்பது பெறப்படும்.
அவ்வாறின்றிக் குமரிக்கு முன்னுள்ள குழந்தைப் பருவமெல்லாம் குறிக்குமா?
வயிறு உணவு நிரம்பவில்லை, ஊருணி நீர் நிறையவில்லை என்றால்,
நிரம்புதற்கும் நிறைதற்கும் உரிய அளவை நெருங்கிவிட்டன எனவும், இன்னும்
சிறிது உணவு உண்டால் நிரம்பவிடும், இன்னும் சிறிது நீர் வந்தால் நிறைந்து
விடும் எனவும், நாம் கருத்தெடுத்துக் கொள்கின்றோம். நிறைவுக்கு நெருங்கிய
நிலையிற்றான், நிறைவு பற்றிய வினைச்சொற்கள் ஆளப்படும். ஆதலின்
இன்னும் ஓரிரு திங்களுக்குள் ஓராண்டிற்கும் காமப்பதம் நிறைதற்குரிய அன்ன
இளையவனைத் தான் ‘காமஞ்சாலா இளமையோள்’ என்றார் தொல்காப்பியர்.


     பருவம் உற்ற குமரியரெல்லாம் காதலித்தற்கும் மணங்காணுதற்கும்
உரியவர்கள். இவை கன்னிமை கழிந்து மனைவியாகின்றவள் நேற்றுவரை
குமரியாக இருந்தவள். நெறுநற்குமரி இன்று ஒரு கொண்டானைப் பெற்று

இல்லாள் ஆயினாள் என்பதை அறிவது எப்படி? இனி இவள்மேல்
பிறனொருவன் காதல் நோக்கம் செலுத்தக்கூடாது என்று அறிவிப்பது எப்படி?
அதற்குத்தான் கரணக்குறி ஏற்பட்டது என்று முன் இயலில் கற்றோம்.
அணிமையில் மணந்த குமரியரை மணக்க இருக்கும் குமரியரோடு
வேறுபடுத்திக் காட்டுவதற்கென்றே கரணவழக்கைச் சமுதாயம் கண்டது என்று
முன்னை இயற்கண் தெளிந்தோம். அன்னதொரு புறவடையாளம் காமஞ்சான்று
ஆளான குமரி நங்கைக்கு இல்லைகாண். அணிமையில் ஆளான கன்னிக்கும்
ஆளாக இருக்கும் பெண்ணுக்கும் மெய்வேறுபாடு பெரிதும் உண்டா? புற
அடையாளம் இன்மையானும், மேனி வேறுபாடு இன்மையானும்,
குமரியெனக்கொண்டு ஒருவன் காதல் செலுத்துகின்றான்; அவளது கோதி
நெளிந்த கூந்தலையும், பருத்த மெல்லிய தோளினையும், மலர்போலும்
குளிர்ந்த கண்ணினையும், மான் போலும் மருண்ட பார்வையினையும், மழை
பெற்ற தளிர்போலும் மேனியினையும், ஒளி விளங்கும் நெற்றியினையும்,
முகைபோலும் கூரிய பல்லொழுங்கினையும், கொடி போலும் துவளும்
இடையினையும்,     

   
வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்தோள்
    பேரெழில் மலருண்கண் பிணையெழில் மானோக்கின்
    காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதல்
    கூரெயிற்று முகைவெண்பல் கொடிபுரை நுசுப்பினாய்  (கலி. 58)


எனப் பாராட்டி வியக்கின்றான். அன்னமும் மயிலும் புறாவும் போன்ற
நின் எழில் நலத்தைக் கண்டார் காம மயக்கம் கொள்ளாரோ? என்று
(கலி. 59) தன்
காமத்துயரை அறிவுறுத்து