பக்கம் எண் :

182தமிழ்க்காதல்

சொல்லளவில் நின்றொழிவது என்பதும் பெறப்படும். இவன்
பலபடப்புனைந்தும் வருந்தியும் இன்புற்றும் பார்த்தும் கூறும் கருத்தெல்லாம்
இவன்தன் செவியளவினவே, கண்ணளவினவே. அப்பெண்ணுக்கு யாதும்
எட்டவில்லை; அவளுக்கு ஒன்றும் தெரியாது; அவள் இவனைச் சிறிதும்
அறியாள், எண்ணாள். இவ்வமைப்பு நிலையைநினைத்துக் கொண்டு
கைக்கிளைப் பாடல்களைக் (கலி. 56,57,58,109) கற்கவேண்டும்.


                             VI


கைக்கிளையும் இளைஞனும்


     ஓருறுப்பு நாடகம் என்பதுபோல ஒருதுறை கொண்ட திணை கைக்கிளை.
இதனை விரித்துப் பலதுறையாக்க முயலலாம். காமஞ்சாலா இளையவள்
முன்னின்று விளம்பினாள் என்று கூறலாம். தான் இன்னும் பருவம்
வாயாதவள் என்று அவள் சொல்லெதிர் மொழிந்ததாகக் கூறலாம். அவள்
நேரே மறுத்துச்
சொல்லியதாகவும், அதுகேட்டுத் துன்புற்றான் எனவும்
கூறலாம். என் உள்ளம் முதற்கண் சென்ற உன்னை, ஆளாகியபின்
மணப்பேன் என்று உறுதி செய்தான் என்று கூறலாம்.


     இவ்விரிவெல்லாம் உலகியல் முறைக்கும் கற்பனைக்கும் ஓரளவு
பொருந்திவருமேனும், சான்றோர் வடித்த அகத்திணைக் கைக்கிளைக்குப்
பொருந்தா. எவ்வகையயேனும் இக்கைக்கிளைக்கு ஒருகூற்றாகப் பெண்ணைத்
தொடர்புபடுத்தக் கூடாது.


     கைக்கிளை என்ற தொடருக்குச் சிறியஉறவு என்பது பொருள். சிறிய
என்றால் இழிந்த என்னும் பொருளன்று. அவ்வுறவு நிற்கும் காலம் சிறியது
என்பது கருத்து. கிளை என்பது ஓர் உருவகச் சொல். இச்சொல்லாலும்
விரிவற்ற வளராத நிலை பெறப்படும். கை என்பதற்குத் தனிமைப் பொருளும்
உண்டு; கைம்பெண் என்ற தொடரிற்காண்க. ஆதலின் கைக்கிளை சிறிய
தனித்த உறவு என்று கொள்ளலாம். கைக்கிளை என்னும் குறியீடு
இருபாலர்க்கும் சொல்லத்தக்க பொதுநிலையிற்றான் அமைந்துள்ளது எனினும்,
ஆண்பாற் படுத்துவதே, இளையவன் காதலைக் கூறுவதே, இலக்கணமரபாகும்.1
“சொல்லெதிர் பெறாஅன்” என்பது தொல்காப்பியம்.


     குமரியொருத்தியும் காமஞ்சாலா இளையவனைக் குமரனாகக் கருதித்
தன் காதலைச் செலுத்தலாமே; அவனிடத்துக் காதற்குறிப்பு யாதும்
தோன்றாமையில், சொல்லெதிர் பெறாளாகிச் சொல்லி

 ____________________________________________________
     தொல், அகம், பாரதியார் உரை; ப.185.