பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்185

உள்ளதை உட்கொண்டு புனைகின்றன.1 திருக்குறள் வரைவில் மகளிர் என்ற
அதிகாரத்தால் பரத்தையைக் கடிகின்றது. பிறன் மனைநயக்கும் கயமை தமிழ்ச்
சமுதாயத்தில் காணப்படினும், அதனைப் பொருளாக வைத்து இலக்கியம்
பாடினாரிலர். எனினும் ஒழுக்கமுரணான அவ்விழுக்கத்தை அறநூல்கள்
சுட்டிக் காட்டுகின்றன. இலக்கணமும் இலக்கியமும் அறநூல் என்ற முத்திறமும்
தொகுத்துக் காணின், தமிழ்ச் சமுதாயத்தில் நிலவியிருந்த நல்ல கெட்ட
காதற்போக்குகளை முழுதுற அறிந்து கொள்ளலாம். பேதைக் காதல்
எத்திறத்தும் இடம் பெறாமையின் தமிழ்ச்சமுதாயத்தில் இல்லை என்பதே
முடிபு. அகத்திணைக் கைக்கிளையில் இடம் பெறுபவள் பேதைப்பெண்
அல்லள்,
காமப்பருவத்தை நெருங்கும் பெதும்பைப் பருவத்தவளே என்று
முன்னர் விளக்கியுள்ளேன். கைக்கிளைச் செய்யுட்களில் பெண்ணுறுப்புக்களைப்
புனையும் பெற்றியை நோக்கினால், அப்புனைவு குமரிப்பருவத்தை அணுகும்
பெதும்பைக்கு உரியது என்பது தெளிவு.     

    முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
    பெயல்துளி முகிலெனப் பெருத்தநின் இளமுலை
    மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
    உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ (கலி.56)
 
    வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பால்
    மாவென்ற மடநோக்கின் மயிலியல் தளர்பொல்கி
    ஆய்சிலம் பரியார்ப்ப அவிரொளி இழையேய்ப்பக்
    கொடியென மின்னென அணங்கென யாதொன்றும்
    தெரிகல்லா இடை.             (கலி.57)

     மேலும் இக் கைக்கிளைப் பாக்கள் அவள் உறுப்பும் வனப்பும்
கண்டவர்தம் உயிரை வாங்க வல்லன (கலி.54) எனவும், அவள் கண்ணோக்க
எல்லார்தம் உள்ளத்தையும் புண்ணாக்கும் (கலி.109) எனவும் தோற்றத்தை
நுவலுகின்றன. எனவே ஆளானவள் என்று கருத்தோடத்தக்க அணுகிய
பருவத்தினள் என்று துணியலாம்.


     காமப்பருவம் உற்றவர்க்கே மணங்கூட்டுவது என்பது தமிழ்ச்சமுதாய
மரபு. மணப்பட்டார் அன்றே இன்பந்தலைப் பெய்வர்-தமர் நமக்கு ஈந்த

தலைநாள் இரவில் கோடிக்கலிங்கம் உடுத்தவளைக் கூடிக்கலந்தேன் என்று
(அகம்.136) ஒரு மணமகன் நினைவு கொள்கின்றான். கோடிக் கலிங்கத்துள்
நாணி ஒடுங்கிய காதலியின் முகமறைவைத் திறந்து இன்புற்றேன் என்று
(அகம்.86) ஒரு தலைவன்மணநாளை நினைக்கின்றான். மணவிழாவன்று
காதலிக்குக் கோடி கொடுத்தல் வழக்கு. கோடி உடுத்திருந்தாளொடு இனிது
கலந்தான் என வருதலின், மணமான, அன்றிரவே

 ____________________________________________________
     அகநானூற்றுச் சொற்பொழிவுகள். ப. 20.