பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்245

    ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை            (கலி.18)


     என்பது ஓர் ஏழைத் தலைவியின் துணிபு. இருவரும் ஓராடையைக் கூறு
செய்து உடுத்துவோம். பொருளில்லாவிடில் என்கெட்டது? ‘பிரியா
வாழ்க்கையே வாழ்க்கை’ என்பது அவ்விள நங்கையின் அறிவுரை.
அகத்திணை அமைப்பு தொழில் பொருள் பதவி முதலியவற்றைச் சார்ந்து
நிற்கவில்லை என்று மேலை விளக்கத்தால் தெளிக. உள்ளங் கலந்த
பாலாரெல்லாம் அகத்திணைக்குச் சால உரிமையுடையவர்.
உள்ளப்புணர்ச்சியே. காதலுக்கு வேண்டும் இனிய அகவரம்பு. இவ்வரம்பு,
நினைப்பின், எல்லா மாந்தரும் கொள்ளுதற்கு எளியது, காதல் இன்பச்
சாதலாகாதிருக்க வேண்டுமெனின், ஞாலம் தமிழர் கண்ட அகத்திணை வழி
நடப்பதாகுக. கபிலர்
குறிஞ்சிப் பாட்டுப் பாடி ஆரிய அரசனுக்குக் கற்பித்தது
என்? அகத்திணையைக் கண்டது தமிழினமாயினும், அது கூறும் காதல்
மனிதவினத்திற்கே பொது என்பது அவர் நோக்கம். ஒரு நாட்டவரின் கண்டு
பிடிப்புக்கள் உலகப் பொதுவாகவில்லையா?