பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு35

ஒவ்வொன்றும் தனித் திணையாகக் கருதப்பட்டமையின், அவையப் புலவர்கள்
ஐந்திணை மேலும் பாடாது ஆளுக்கு ஒரு திணையாக இலக்கியம் கண்டனர்.


    
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
     கருதுங் குறிஞ்சி கபிலன்- கருதிய
     பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
     நூலையோ தைங்குறு நூறு.


     எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறும் கலித்தொகையுமே பாடினோர்

எண்ணிக்கை குறைந்த நூல்கள். ஆண்டும் திணைக்கொரு ஆசிரியரான
செய்தியை-ஐந்திணையையும் ஓராசிரியன் பாடா முறையை-மேலை
வெண்பாக்கள் அறிவிக்கும்.


    
பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
     மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழன்
     நல்லுத் திரன்முல்லை நல்லந் துவனெய்தல்
     கல்விவலார் கண்ட கலி.


     பெருங்கடுங்கோ பாலைத்திணை (பிரிவு) ஒன்றனையே பாடிப் ‘பாலை
பாடிய’ என்ற சிறப்புப் பெற்றவர். ஒரு திணைக்குரிய உரிப்பொருளைப்
பாடுங்காலும், எல்லாத் துறை மேலும் பாடாது ஒரு துறையளவில் பாடிநின்ற
அகப் புலவர் பலர். வெறி பாடிய காமக்கண்ணியார் ஒரு துறை பாடிய
சிறப்புப் புலவர். மேலும் முதல் கருப்பொருள்களைச் சிறிதும் கூறாதே
உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்களும் பலவுள.


     நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
     இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
     அமைதற் கமைந்தநங் காதலர்
     அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே (குறுந்.4)


     உரிப்பொருள் ஒன்றே நுவலும் இவ்வனைய பாக்கள் பாலைத்திணை,
குறிஞ்சித்திணை யெனச் செவ்விதின் பெயர் பெறுகின்றன. காரணம்
திணைமையாவது உரிப்பொருளே பற்றியது. முதலும் கருவுமோ
அப்பொருட்குத்
துணைமையாம் அத்துணையே. ஆதலின் அகத்திணை
எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை புணர்தல் பிரிதல் இருத்தல்
இரங்கல் ஊடல் பெருந்திணை என்னும் காமவொழுக்கங்களை
அடிப்படையாகக் கொண்டது என்று தெளியத்தகும்’ அகத்தின் இலக்கணம்
என்னை? அகம் என்ற கிளவிக்குப் பொருள் என்னை? இவை இனித்
தொடர்ந்து ஆயவேண்டுபவை எனினும், இப்போது ஆய்வு பெறுமாறில்லை.
இடையே சிலபல அகச்செய்திகள் விளக்கம் பெற்ற பின்பு. இவ்வாய்வைத்
தொடங்குவது தெளிவுக்கும் முடிபுக்கும் எளிமை செய்யும்.