பக்கம் எண் :

78தமிழ்க்காதல்

  கற்புத்திணை பாடியோர் தொகை 
  கற்புத்திணை மட்டும் பாடியோர்
  பேயனார்
  ஓரம்போகியர்
  ஓதலாந்தையார்
  பாலை பாடிய பெருங்கடுங்கோ
  மருதன் இளநாகனார்
  அம்மூவனார்
  பரணர்
  மாமூலனார்
  ஒளவையார்
  நக்கீரர்
  இளங்கீரனார்


 பாடியவை
“ 








233
140
104
94
65
60
58
45
29
25
18
16
15

இப்பதினொருவரும் கற்புத்திணைக்கு நிறைந்த பாடல்கள் அருளியவர். 28
பாடல்களை இயற்றியோர் பெயர்களை அறியோம்.


பொருள்வயிற் பிரிவு


     திருமணத்துக்குப் பின் அகத்தும் புறத்தும் யாதொரு தங்குதடையின்றிக்
காதலர்கள் ஆரா இன்பத்தை அமர்ந்து அணைத்துத் துய்ப்பர்;


    
கரணத்தின் அமைந்து முடிந்த காலை
     நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி       (தொல். 1091)


என்று தொல்காப்பியர் களவென்னும் மொட்டு கற்பாக மலர்ந்த விடுதலையைக்
குறிப்பிடுவர். தலைவன் தலைவி நெஞ்சங்கள் களவுக் காலத்து ஊரறியுமோ
என்ற அச்சத்தால், தளைபட்டுக் கட்டுண்டு கிடந்தன. அன்பிற்கும்
அடைக்குந்தாழ் ஏற்பட்டிருந்தது. பலரறிய மணச்சடங்கு முடிந்த பின்னர்,
அன்பு நெஞ்சங்களைப் பிணித்திருந்த தளைகள் தாமே அவிழ்ந்தன.
காதலர்கள் கட்டற்ற கலவியின்பம் கற்பில் துய்க்கின்றனர் என்பது
தொல்காப்பியக் கருத்தாகும். ‘சடங்கு நிகழ்ந்து முடிந்த காலத்துக் களவுக்
காதலர்கள் நெஞ்சிலிருந்த கட்டு அவிழப்பெற்றுப் புணர்வர்’ என்பது
இந்நூற்பாவின் இயல்பான உரை. பல சொல் தந்து உரை செய்ய வேண்டா
நிலையில் தொல்காப்பியச் சூத்திரம் அமைந்திருக்கும் எளிமையைக் காண்க.
இவ்வெளிய இனிய கற்பியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர்