சுருங்கக் கூறுவர். அதனால் கைக்கிளை பெருந்திணைகளின் சின்னிலையை நாம் அறிகின்றோம். ஓர் அகப்பாட்டிற்கு இரண்டு மூன்று துறைகள்கூட எழுதப் பட்டுள. ஒருதுறை களவாகவும் மற்றொரு துறை கற்பாகவும் அமைந்துள. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. (கற்பு) அல்ல குறிப்பட்டழிந்த தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம். (களவு) தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம். (களவு) என மூன்று துறைகள் 126ஆம் அகப்பாட்டுக்கு உண்டு. இங்ஙனம் துறை பல கொண்ட பாடல்கள் சங்கவிலக்கியத்து நிரம்பக் காணப்படும். இத்துறையாராய்ச்சியில் நான் புகவில்லை. முதலில் நிற்கும் துறையே அப்பாட்டின் துறையெனத் தழுவிக் கொண்டேன்.1 அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறுகளின் உரையாசிரியர்களும் முதற்றுறைக்கே உரை கண்டனர். இந்த நான்கு தொகை நூல்களுக்கும் உரையெழுது முன்னரே, தொகுத்த காலத்துத் துறைகள் எழுதப்பட்டன என்பது நினையத்தகும். கலித் தொகையின் நிலைமட்டும் வேறாயிற்று. தொகுத்தவர் துறை வகுக்கவில்லை. உரையெழுத வந்த நச்சினார்க்கினியரே துறையும் எழுத வேண்டியவராயினார். இவர் தொல்காப்பியத்துக்கும் உரை கண்டவரன்றோ. இதன் விளைவு என்ன? தொல்காப்பியத்தில் தாம் வலிந்து எழுதிய இலக்கணங்களுக்கு இலக்கியங் காட்டவேண்டிக்கலித்தொகைத் துறைகளைத் திரித்து எழுத நேர்ந்தது. முற்கூறியாங்கு அகநானூறு முதலிய தொகைகளின் பழந்துறைகளை உள்ளபடி உடன்பட்ட யான், நச்சினார்க்கினியர் எழுதிய கலித்தொகைத் துறைகளை மட்டும் திறனாய்ந்து மேற் கொண்டுள்ளேன்.எட்டுத் தொகையுள் கலித்தொகை யிற்றான் கைக்கிளை பெருந்திணைப் பாடல்கள் இருத்தலின், இத்திறனாய்வு இத்தொகையளவில் இன்றியமையாதாயிற்று. கைக்கிளை பெருந்திணைகளின் இலக்கணம் பலவகையான கருத்து வேற்றுமைக்கு உரியது; அகத்திணையின் பொது விலக்கணத்தைத் தெளிந்து கொண்டால், இக் கருத்து மாறுகள் ____________________________________________________ நூலிற்கண்ட துறைகள் சிலவற்றில் இரண்டாவதாக அமைந்ததும், சிலவற்றிற்கு உரையாசிரியர்கள் எழுதுவதும், பிறவற்றைவிடப் பொருத்தமுள்ளனவாகத் தோன்றுகின்றன. - டாக்டர் உ.வே.சா. குறுந்தொகைப் பதிப்பு, முகவுரை. |