பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்95

     முற்றிய திருவின் மூவ ராயினும்
     பெட்பின் றீதல் யாம்வேண் டலமே (புறம். 205)
     அகனகவாரா முகனழி பரிசில்
     தாளி லாளர் வேளா ரல்லர் (புறம். 207)
     வாழ்தல் வேண்டிப்
     பொய் கூறேன் மெய் கூறுவல் (புறம். 139)


அறத்தின் வழிவராத எவ்வகைப் பேறும் முன்னையோரால் வைத்துப் பாராமல்
பழிக்கப்பட்டது.


     ஒழுக்கப்பற்றோடு ஒரு சமுதாயம் காணும் உலகியல் முன்னேற்றம் ஏன்
உயிரியல் முன்னேற்றம் ஆகாது? ஒழுக்கம் இல்லா உலகியம் அழிவைத்
தரும். ஒழுக்கமில்லா உயிரியம் வஞ்சகம் எனப்படும். உலகியம் உயிரியம்
மற்று எவ்வியத்துக்கும் ஒழுக்கியம் மிக இன்றியமையாதது, தூய
அடிப்படையாவது. இதனால் முன்னைத் தமிழர் எல்லா வாழ்க்கைத்
துறையிலும் குருதியோட்டம் போலும் ஒழுக்கத்தையே வற்புறுத்தியிருப்பக்

காண்கின்றோம். உயிரியம் என்பது ஒரு நெறியன்று; உயிர்கள் அடைதற்கு
உரிய இறுதி நிலையாகும். அதனை அடைதற்குத் தக்க நெறிகளை
மேற்கொள்ள வேண்டும். தக்க நெறிகளாகத் தமிழ்ச் சான்றோர் கண்டவை:
இல்லறம், குடும்பக் கடமைகள், பொருளீட்டி வறியார்க்கும் உற்றார்க்கும் ஈதல்,
கண்ணோட்டம், மனம் வாய்மெய்த் தூய்மை, நாட்டுக் கடமை, புகழ்ப்பேறு,
சுருங்கச் சொல்லின் பிறந்த உலகத்துச் சிறந்து வாழ்தல்.


     தமிழினத்தின் ஒவ்வோர் எண்ணத்துள்ளும் இவ்வுலகியற் பண்பு
செறிந்து கிடக்கின்றது. பரத்தைகளை நாடிச்சென்ற தலைவன் தன் வீட்டு
வழியாகத் தேரைச் செலுத்தினான். அம்மணியொலி கேட்டு வீட்டினுள் இருந்த
சிறுமகன் குறுகுறு நடந்து தந்தையைக் காணத் தள்ளாடித் தெருவிற்கு ஓடி
வந்தான். வந்தவனைக் கண்ட தந்தைக்கு மேலும் தேரைச் செலுத்த மனம்
வருமோ? தேரை நிறத்துக என்று பாகனுக்கு சொல்லி இறங்கிவந்து, எச்சில்
ஊறும் தன் அன்புக்குழவியை மார்போடு அணைத்து, இனி வீட்டினுள்
செல்வாய் என்றான். குழந்தை செல்ல மறுத்தது. அதனை வாயிற்படியிலேயே
அழவிட்டுப் பரத்தை நாட்டாங்கொள்ளத் தலைவன் உள்ளம் மறுத்தது.
அழுங் குழவியையும் உடனழைத்துக் கொண்டு பரத்தையின் மணமனை
ஏகுதல் சமுதாய மரபல்லவே. என் செய்வான் இப் பேதைப் பெருந்தகை?
மகன்தன் விடாப் பிடிக்கு மகிழ்ந்து தன் வீட்டினுட் புக்கான். நிகழ்ச்சி அறிந்த
தலைவி மக்கட்பேற்றால் இம்மையின்பத்தொடு மறுமையின்பமும் எய்தலாம்
என்று ஒரு பழமொழி உண்டு; அம்முதுமொழி என் வாழ்க்கையில்
உண்மையாதல் கண்டேன்: