| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 100 |
| ஊரே தென்றேன் இருள் என்றாய் ஒளியே உயிரே உயர்வே, வா! அழுக்கின் உருவே அருகில் வா-உனை அணைத்துக் கொள்வேன் அஞ்சாதே உலகின் அழுக்கைச் சுமந்தாலும் உள்ளத் தழுக்கில்லா உருவே அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய்-நீ அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய் பொய்யின் உருவே அருகில் வா உனைப் புரிந்து கொண்டேன் ஓடாதே உலகின் பொய்யைச் சுமந்தாலும் உள்ளப் பொய்மையில்லா-உருவே பொய்யைக் கடந்து வந்து விட்டாய்-நீ பொய்யின் உருவம் கொண்டுவிட்டாய். இருளின் உருவே அருகில் வா-நாம் இணைவோம் ஒன்றாய் விலாகதே உலகின் இருளைச் சுமந்தாலும் உள்ளத் திருளில்லா உருவே இருளைக் கடந்து வந்து விட்டாய் - நீ இருளின் உருவம் கொண்டு விட்டாய். அழுக்கின் உருவே உன்னிதழில் அமுதம் ஊறுவதெப்படியோ? பொய்யின் உருவே உன்னகத்தில் புனிதம் ஒளிர்வதெப்படியோ ? இருளில் உருவம் உன் விழியில் அருளொளி வீசுவதெப்படியோ ? | தி.சோ. வேணுகோபாலனும், டி.கே. துரைஸ்வாமியும் தங்கள் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர். வேணுகோபாலன் வாழ்க்கைத் தத்துவங்களை சாதாரண நிகழ்ச்சிகளோடு பொருத்திக் காட்டி எளிய முறையில் கவிதைகள் இயற்றினார். உதாரணத்துக்கு ‘ஞானம்’ என்பதைக் கூறலாம். | | சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்(று) உடைக்கும். தெருப்புழுதி வந்தொட்டும் கறையான் மண்வீடு கட்டும். அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன். காலக் கழுதை | | |
|
|