| கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை கந்தைத் துணி, கட்டைத் தூரிகை! அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகம் இல்லை! |
‘ஸட்டயர்’ ஆக-- பரி்காசத் தொனியோடு எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ‘விசாரணை’ என்பது இந்த ரகத்தைச் சேரும். |
| தத்துவந்தானே? வெங்காயம்! போடா! போ! மூடியதை மூடிப் பின்மூடி! முடிவா? உரித்தால் மேலும் உரித்தால் கண்ணீர் கொட்டும் முட்டாளுக்கு உருக்கம்! மூளை மோதினால் தலைக்குத் தேங்காய்! உனக்கும் எனக்கும் முடிந்தால் இதயத்திற்கு மருந்து! அனேகருக்கு வயிற்றை நிரப்ப வேகும் கூத்துத்தான்! என்று மேலும் வளர்கிறது அது. |
‘இலக்கிய அனுபவம்’ என்பதும் நல்ல கிண்டல்தான். |
| சொல்வ திரண்டு வகை சிந்தித்துச் சொல்லல்! சிந்தை இலையாதல்! கரகம் அல்லது கண்கட்டு; இரண்டுக்கும் பொருள் சொன்னவன் புலவன்! கண்டவன் கலைஞன்! முழிப்பவன் நீயும் நானும் கேவலம் வாசகக் கும்பல்! |
டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. க.நா.சு. புதுக்கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை-’கவிதை சிக்கலும் |